மைதானத்தில் உருவான காதல் கதை.. கிரிக்கெட் வீராங்கனைகளை திருமணம் செய்த 5 வீரர்கள்.. விவரம் இதோ

0
383

சினிமா நட்சத்திரங்களை மிஞ்சும் அளவிற்கு கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுவும் அவர்களுக்கு என தனி பெண்கள் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. சிலர் கிரிக்கெட் விளையாடி பலரின் மனதை வென்றிருக்கிறார்கள். ஒரு சிலர் தங்களுடைய திறமை மூலம் கிரிக்கெட் விளையாடும் வீராங்கனைகளின் இதயத்தையே வென்றிருக்கிறார்கள்.

கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நடிகைகளை திருமணம் செய்து பார்த்திருப்போம். போர்க்களத்தில் பூ மலரத்தான் செய்யும் என்பது போல் கிரிக்கெட் களத்திலும் காதல் மலர்ந்து, அது கல்யாண வரை சென்ற ஐந்து வீரர்கள் குறித்து தான் நாம் இங்கு பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பது ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் டொனால்ட் திரிபானோ, இவர் ஜிம்பாப்வே அணியின் சிறந்த பந்துவீச்சாளராக விளங்குகிறார். ஜிம்பாப்வே மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சீப்போ முகிரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பது இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஜர் பிரைடாக்ஸ். இங்கிலாந்துக்காக மூன்று டெஸ்ட் போட்டிகளை விளையாடிய ரோஜர் பிரைடாக்ஸ், இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனை ருத் வெஸ்ட்புருக்கை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பவர் முன்னாள் இலங்கை விக்கெட் கீப்பர் கெய் டி அல்விஸ். இவர் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஆல்ரவுண்டர் ரசன்ஜாலி சில்வாவை திருமணம் செய்து கொண்டார். இருவருமே தங்களுடைய நாட்டுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்.  இவர் ஆஸ்திரேலியா மகளிர் அணியின் ஸ்டார் வீராங்கனையான அலிசா ஹேலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது மட்டுமல்லாமல் இவ்விருவரும் களத்தில் ஒருவருக்கு ஒருவர் வந்து ஆதரவு கொடுப்பது ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கும் செயலாக இருக்கும்.

இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் ருதுராஜ்க்கு ஏற்கனவே பல பெண்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ருதுராஜ், மகாராஷ்டிரா கிரிக்கெட் அணியில் விளையாடும் உதராக்ஷா பவார் என்ற வீராங்கனையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.