“டெஸ்ட் கிரிக்கெட்டில் 400ரன்.. என் சாதனையை இந்த இந்திய இளம் வீரர் உடைப்பார்!” – லாரா பரபரப்பான கணிப்பு!

0
498
Lara

உலக கிரிக்கெட்டில் சிலர் ஏற்படுத்திய தாக்கம் என்பது இன்னொரு வீரரால் எப்பொழுதும் ஏற்படுத்த முடியாது. மேலும் அவர்களுக்கு ரசிகர்களுக்கு கொடுத்த பரவசம் சிலிர்ப்பு இன்னொரு வீரரால் ஈடு செய்ய முடியாதது. அப்படிப்பட்ட ஒரு தனித்துவமான பேட்ஸ்மேன் பிரையன் லாரா!

கிரிக்கெட் உலகத்தில் 90களில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்திய இரண்டே பேட்ஸ்மேன்கள் ஒன்று லாரா இன்னொன்று சச்சின். இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு யார் சிறந்தவர்கள் என்கின்ற பேச்சு தற்பொழுது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது தான் சிறப்பு.

- Advertisement -

இவர் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் 1994 ஆம் ஆண்டு 501 ரன்கள் ஒரு இன்னிங்ஸில் அடித்து அசத்தியிருந்தார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 400 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்திருந்தார்.

கிரிக்கெட்டில் பலர் ஏற்படுத்தியிருக்கும் சாதனைகள் குறித்து யாரால் உடைக்க முடியும் என்று பேசுவது வழக்கம். ஆனால் பொதுவாக லாரா செய்துள்ள உலக சாதனையை பற்றி யாரும் பெரிதாக பேச மாட்டார்கள். ஒரு இன்னிங்ஸில் நான்கு சதம் என்பது அரிதான ஒன்றாக ரசிகர்களுக்கே தோன்றக்கூடிய விஷயம்.

இந்த நிலையில் தன்னுடைய இந்த அரிய இரண்டு சாதனைகளை யாரால் முறியடிக்க முடியும் என்று பிரையன் லாரா பரபரப்பான தன்னுடைய கருத்தை வெளியிட்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர்கூறும் பொழுது “சுப்மன் கில் என்னுடைய இரண்டு சாதனைகளையும் நீடிக்க முடியும். இந்த புதிய தலைமுறை பேட்ஸ்மேன்களில் அவர் மிகவும் திறமையானவர். வரும் ஆண்டுகளில் அவர் கிரிக்கெட்டை ஆள்வார். நிறைய சாதனைகளை முறியடிப்பார் என்று நம்புகிறேன்.

கில் உலககோப்பையில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஆனால் அவர் ஏற்கனவே விளையாடி இருக்கும் விதத்தை பாருங்கள். அவர் அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்திருக்கிறார். ஐபிஎல் தொடரிலும் சதங்கள் அடித்திருக்கிறார். பல மேட்ச் வின்னிங் நாக் விளையாடி இருக்கிறார். எதிர்காலத்தில் அவர் பல ஐசிசி போட்டிகளில் விளையாடுவார் என்று நம்புகிறேன்.

அவர் பேட் செய்யும் விதம் அருமையாக இருக்கிறது. அவர் மீது எனக்கு நிறைய நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. அவர் வேகப்பந்துவீச்சாளர்களை தரையோடு அடிக்க டிராக்கில் எப்படி சார்ஜ் செய்கிறார் என்று பார்த்தீர்களா?அது நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது.

கில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடினால் என்னுடைய 501 ரன் சாதனையையும் முறியடிக்க முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய 400 ரன்களை அவர் தாண்டுவார். கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது. உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் லீகுகளில் பேட்ஸ்மேன்கள் விளையாடி நிறைய பேட்டிங் மாற்றங்கள் வந்திருக்கிறது. ஸ்கோரிங் விகிதம் உயர்ந்து விட்டது. சுப்மன் கில் நிறைய சாதனைகளை முறியடிப்பார். என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறி இருக்கிறார்!