“இன்னும் 4 மேட்ச்.. 4 சதம் அடிக்கனும்.. அதிர்ஷ்டத்தை குடுத்ததே இந்தியாதான்” – ஆட்டநாயகன் போப் பேட்டி

0
142
Pope

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வரும் அந்த அணியின் துணை கேப்டன் போப் தன் வாழ்நாளின் மிகச்சிறந்த இன்னிங்சை விளையாடி இருக்கிறார்.

இதற்கு பரிசாக இந்திய மண்ணில் இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வென்று இருக்கிறது. மேலும் ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணி பெற்ற சிறந்த டெஸ்ட் வெற்றிகளில் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது.

- Advertisement -

காரணம் இந்திய மண்ணில் ஆசியாவுக்கு வெளியில் இருந்து வரும் எந்த அணிகளும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது என்பது மிகப்பெரிய விஷயம். அது ஒரு டெஸ்ட் தொடரை வெல்வதற்கு சமமானது.

மேலும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் பின்தங்கி இருந்த இங்கிலாந்து அணியை 230 ரன்கள் முன்னிலைக்கு கொண்டு வந்தது போப்பின் பேட்டிங்தான். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவதற்கான ரண்களை அவர் கொண்டு வந்து கொடுத்தார். 196 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருது வென்றிருக்கிறார்.

தற்பொழுது இவரது பேட்டிங் குறித்து இந்திய மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் மற்றும் விளையாடி வரும் வீரர்கள் என அனைவரும் மிகுந்த பாராட்டுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் இவருடைய இன்னிங்ஸை புகழ்ந்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற போப் பேசும்பொழுது ” 100% இது எனது சிறந்த இன்னிங்ஸ். இது போன்ற தொடரை இப்படித்தான் தொடங்க வேண்டும். நிமிர்ந்த தலை உடன் தோள்களை அசைத்து அடுத்த நான்கு போட்டிகளை சந்தித்து நான்கு சதங்கள் எடுக்க இது உதவும். இரண்டாவது இன்னிங்ஸில் எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் கிடைத்தது.

நான் இன்சைடு எட்ஜ் எடுக்காமல் இருக்க கவனம் செலுத்தினேன். நான் இதே கவனத்தோடு ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடுவதில் பாசிட்டிவாக என்னை வைத்துக் கொண்டேன்.

இதையும் படிங்க : “அஷ்வின் ஜடேஜாவை பார்த்து ஒரு மாற்றத்தை செஞ்சேன்.. அதுதான் வெற்றிக்கு காரணம்” – ஹார்ட்லி சுவாரசிய தகவல்

மேலும் இந்த தொடருக்காக என்னுடைய பேட்டிங் டெக்னிக்கை கொஞ்சம் மாற்றி இருக்கிறேன். மேலும் இந்த தொடருக்காக நான் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே தயாராகி விட்டேன். எனது விளையாட்டில் நான் மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.