தகுதி இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் வாய்ப்பை இழந்த 4 இந்திய வீரர்கள!

0
3884

இந்திய அணி ஜூலையில் வெஸ்ட் இண்டீஸ் க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி தோல்வியை தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது . அணியின் மூத்த வீரரான புஜாரா நீக்கப்பட்டு அஜிங்கிய ரகானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் . மேலும் உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்த ருத்ராஜ் கெயிக்வாட் யஸ்ஜஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது . பந்து வீச்சிலும் முகேஷ் குமார் மற்றும் நவ்தீப் ஷைனி போன்ற இளம் பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் .

- Advertisement -

இந்த அணியானது இளம்பிரர்கள் மற்றும் மூத்த வீரர்களின் கலவையாக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கத்தை தொடர்வதற்காக வலுவான அணியை தேர்வு செய்து இருக்கிறது பிசிசிஐ. ஆனாலும் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்த திறமையான சில வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது வருத்தமான ஒன்று . தொடர்ச்சியாக கடந்த இரண்டு ரஞ்சி சீசன்களில் திறமையாக விளையாடி அதிக ரன்களை குவித்தும் இந்த வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது வேதனையான ஒன்றாக இருக்கிறது . அவ்வாறு திறமை இருந்தும் தங்களது திறமையை வெளிக்காட்டியும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்படாத நான்கு வீரர்களை பற்றி பார்ப்போம் .

அபிமன்யு ஈஸ்வரன்:
பெங்கால் அணியின் துவக்க வீரரான இவர் 2013 ஆம் ஆண்டு முதல் ரஞ்சிப் போட்டிகளில் ஆடி வருகிறார் தொடர்ந்து ரஞ்சிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இந்தியா ஏ அணிக்கும் தேர்வு செய்யப்பட்டு தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார் . இதுவரை 81 ரஞ்சிப் போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் 6557 ரன்களை எடுத்துள்ளார். கடந்த ரஞ்சி சீசனில் எட்டு போட்டிகளில் ஆடி இருக்கும் அபிமன்யு ஈஸ்வரன் 798 ரன்களை எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இது போன்ற வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது துரதிஷ்டமே

சர்பராஸ் கான் :
இந்தியாவின் டான் பிராட்மேன் என அழைக்கப்படும் சர்பராஸ் கான் கடந்த 2020 ஆம் ஆண்டு ரஞ்சி சீசனில் இருந்து தொடர்ச்சியாக ரண்களை குவித்து வருகிறார் . இதுவரை 37 போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் 3507 ரன்களை குறித்துள்ளார். இவரது சராசரி 79.7 ஆகும் . முதல் தரப் போட்டிகளில் டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக அதிக சராசரி உள்ள வீரர் இவர் தான் . தொடர்ச்சியாக மூன்று ரஞ்சி சீசன்களிலும் அதிக அளவு ரண்களை குவித்தும் இன்னும் இந்திய அணியின் வாய்ப்பிற்காக காத்திருக்கிறார் .

- Advertisement -

அக்ஷய் வட்கர்:
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான ரிஷப் பண்ட் முகத்திற்கு உள்ளான நாளிலிருந்து இந்தியா ஒரு திறமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனுக்காக காத்திருக்கிறது தற்போது அவரது இடத்தில் ஆந்திராவைச் சார்ந்த கேஎஸ் பரத் ஆடி வந்தாலும் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார் . இதுவரை இந்திய அணிக்காக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் பரத் ஒரு அரை சுகம் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . அவருக்கு மாற்று வீரராக இருக்கும் இசான் கிஷான் ஒரு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான ஆட்டக்காரராகவே பார்க்கப்படுகிறார் . இந்நிலையில் இதர் பாவை சார்ந்த அக்ஷய் வட்கர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் வீரர் . விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் ஆன இவர் 41 முதல் தர போட்டிகளில் விளையாடி 2505 ரண்களை சேர்த்து இருக்கிறார் . இவரது சராசரி 53.3 ஆகும் . இவர் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டால் நிச்சயமாக ரிஷப் பண்டிற்கு ஒரு போட்டியான விக்கெட் கீப்பராக இருப்பார். ஆனால் இவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது .

சூரியகுமார் யாதவ் :
இந்திய அணியின் டி20 நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ் கடந்த சில டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார் . தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி அணியில் அவரிடம் பெறவில்லை . ஒரு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் ஆக இவர் பார்க்கப்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதுவரை 80 முதல் தர போட்டிகளில் ஆடி இருக்கும் சூரியகுமார் யாதவ் 5557 ரண்களை எடுத்துள்ளார் இவரது சராசரி 44.3