2022ஆம் ஆண்டு இரஞ்சி டிராபி நாக் அவுட் போட்டிகளில் விளையாடி வரும் 4 பிரபல இந்திய வீரர்கள்

0
199

2022ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடரின் நாக் அவுட் போட்டிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பெங்களூருவில் இந்த நாக் அவுட் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இரஞ்சி டிராபி தொடரில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பெரிதாக பங்கு கொள்ள மாட்டார்கள். இருப்பினும் ஒரு சில வீரர்கள் அவ்வாறு பங்கேற்று விளையாடி இருக்கின்றனர். அதேபோல தற்பொழுது இந்த ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடரின் நாக் அவுட் சுற்றில் ஒரு சில முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தற்போது விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பற்றி தற்போது பார்ப்போம்.

  1. 1.சுப்மன் கில்

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக மிக சிறப்பாக விளையாடிய அவர் இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு தேர்வாகியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராகும் இருக்கும் அவருக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் அதன் காரணமாகவே அவர் தேர்வாகவில்லை.

- Advertisement -

இந்நிலையில் தற்பொழுது அவர் ரஞ்சி டிராபி தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். முதல் இன்னிங்சில் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இன்னிங்சில் அவர் எவ்வாறு விளையாடப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  1. 2.மயங்க் அகர்வால்

மயங்க் அகர்வால் இந்திய அணியில் சமீபத்தில் தேர்வாகவில்லை. இந்தியாவை தாண்டி வெளிநாடுகளில் அவர் அவ்வளவு சிறப்பாக கடந்த போட்டியில் விளையாடவில்லை அதன் காரணமாகவே இந்திய நிர்வாகம் அவரை பட்டியலில் இணைத்துக் கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் கர்நாடக அணிக்காக இரஞ்சி டிராபி தொடரில் விளையாடி வருகிறார். உத்தரப்பிரதேச அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் அவர் 10 ரன்கள் குவித்திருக்கிறார்.

- Advertisement -

3.3.மணிஷ் பாண்டே

இந்திய அணியில் அனைத்து வகை பார்மெட்டிலும் மனிஷ் பாண்டேவிற்கு இடம் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஐபிஎல் தொடரில் கூட அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை. இச்சமயத்தில் இரஞ்சி டிராபி தொடர் அவருடைய கேரியரை வலுப்படுத்த மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும்.

கர்நாடக அணியில் இவர் விளையாடி வருகிறார். உத்தரபிரதேச அணிக்கு எதிராக தன்னுடைய முதல் இன்னிங்சில் இவர் 27 ரன்கள் குவித்திருக்கிறார். இரண்டாவது இன்னிங்சில் மிகப் பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று நம்புவோம்.

  1. 4.பிருத்வி ஷா

ஐபிஎல் தொடர் மற்றும் டொமஸ்டிக் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகளில் இவர் சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணியின் ஏனோ வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. மும்பை அணியை கேப்டனாக வழிநடத்தி இவர் ரஞ்சி கோப்பை தொடரில் தற்போது விளையாடி வருகிறார். முதல் இன்னிங்சில் 21 எடுத்த நிலையில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.

இருப்பினும் இவருடைய அணி தற்பொழுது ரன் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. கேப்டனாக மும்பை அணிக்கு ரஞ்சி டிராபி கோப்பையை பெற்று தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.