360ரன் வித்தியாசம்.. 24வருட சோகம்.. பாபர் அசாம் பரிதாபம்.. பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸி!

0
458
Australia

பாகிஸ்தான் அணி தற்பொழுது ஆஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி சில நாட்களுக்கு முன்பு பெர்த் மைதானத்தில் துவங்க, போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிகை தேர்வு செய்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு முதல் இன்னிங்ஸில் டேவிட் வார்னர் 164, மிட்சல் மார்ஸ் 90 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா அணி 428 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் அமீர் ஜமால் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதற்கடுத்து தனது முதல் இன்னிங்ஸ் துவங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா சபிக் 41, இமாம் உல் ஹக் 62 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 271 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.

இதற்கடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு உஸ்மான் கவாஜா 90, மிட்சல் மார்ஸ் 63 ரன்கள் எடுக்க, ஐந்து விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா டிக்ளர் செய்தது.

- Advertisement -

இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு ஆஸ்திரேலியா 450 ரன்கள் டார்கெட் கொடுத்தது. இதை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சவுத் ஷகில் மட்டுமே 20 ரன்கள் தாண்டி24 ரன்கள் எடுத்தார். வேறு யாரும் சரியான ஒத்துழைப்பை தரவில்லை. பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 21,14 என சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, 360 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. 24 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறவில்லை என்கின்ற சோகம் நீடிக்கிறது.

ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். நாதன் லயன் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். ஆட்டநாயகனாக மிட்சல் மார்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தப் போட்டியில் நாதன் லயன் மொத்தமாக 5 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 123 போட்டிகளில் 229 இன்னிங்ஸ்களில் 500 விக்கெட்டுகள் டெஸ்ட்கிரிக்கெட்டில் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார்.

இவருக்கு முன்பாக அஸ்வின் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்க வேண்டியது, ஆனால் அவர் சில வெளிநாட்டு போட்டிகளில் வெளியே அமர வைக்கப்பட்டதால் முடியவில்லை. தற்பொழுது அஸ்வின் 94 போட்டிகளில், 178 இன்னிங்ஸ்களில் 489 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!