34 டாட் பந்து.. 3 எக்கனாமி.. 1 விக்கெட்.. அஷ்வின் மாஸ் கம்பேக்.. ஆஸி தொடருக்கு முன் 50 ஓவர் போட்டியில் கலக்கல்!

0
741
Ashwin

இந்திய அணி உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மோத இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு, இந்திய அணியின் நட்சத்திர ஆப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வாகி இருக்கிறார்.

இதன் காரணமாக அவர் அடுத்த நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவாரா? என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. மேலும் அவரை உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்து நிறைய ஆதரவு குரல்கள் வந்து கொண்டே இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், இன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் கிளப் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு பயிற்சிக்காக விளையாடி இருக்கிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் மயிலாப்பூர் ரிக்ரேஷன் ஏ அணிக்கு, யங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிராக விளையாடினார். இதில் முதலில் பேட்டிங் செய்த அவருடைய அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியில் ஏழாவது இடத்தில் வந்து பேட்டிங் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின் 17 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அஸ்வின் உடைய அணியில் முகுந்த் 78, அஃபான் கடேர் 79 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய யங் ஸ்டார் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் நவ்ஷத் சபிக் 56, ஏழாவது வீரராக வந்த அஜய் சேட்டன் 50 ரன்கள் எடுக்க, அந்த அணி 47.5 ஓவர்களில் 257 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் பந்து வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின், மொத்தம் பத்து ஓவர் களுக்கு 30 ரன்கள் மட்டுமே கொடுத்து, ஒரு விக்கெட் கைப்பற்றினார். வீசிய 60 பந்துகளில் அவர் மொத்த 34 டாட் பந்துகள் வீசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய உலகக் கோப்பை இந்திய அணியில் முழுமையான சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டுமே இருக்கிறார். எனவே அவருக்குத் துணையாக மற்றும் ஒரு முழுமையான சுழற் பந்துவீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் இணைவார் என்றால், அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை!