33சிக்ஸ்.. 263ரன்.. சால்ட் 2வது சதம்.. வெஸ்ட் இண்டிசை மிரட்டிய இங்கிலாந்து.. தாறுமாறான வெற்றி!

0
1742
Salt

இங்கிலாந்து தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

ஒருநாள் போட்டி தொடர் முடிந்திருக்க 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் கடந்த ஆட்டம் போலவே அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தார்கள். இந்த ஜோடி 9.5 ஓவர்களில் 117 ரன்கள் குவித்தது. கேப்டன் பட்லர் 29 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் அதிரடியாக 9 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்.

இதற்கடுத்து கடந்த போட்டியில் அபாரமாக சதம் அடித்த பில் சால்ட் மிகச் சிறப்பாக விளையாடி இந்த போட்டியிலும் 48 பந்தில் சதம் அடித்தது மிரட்டினார். மொத்தமாக அவர் 57 பந்துகள் சந்தித்து 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் 119 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து லியம் லிவிங்ஸ்டன் தன் பங்குக்கு 21 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என ஆட்டம் இழக்காமல் 54 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து ஒட்டுமொத்தமாக மூன்று விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு நிக்கோலஸ் பூரன் 39, ரூதர்போர்ட் 36, ரசல் 25 பந்தில் 51 என அதிரடியாக விளையாடி ரன்கள் எடுத்து கொடுத்தார்கள். ஆனால் அந்த அணியால் இமாலய இலக்கை எட்ட முடியவில்லை. 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் மட்டும் எடுத்து 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் மட்டும் மொத்தமாக 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து தரப்பில் ரீஸ் டாப்லீ 3, ரேகன் அகமத் மற்றும் சாம் கரன் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். தற்பொழுது இந்தத் தொடர் 2-2 என சமனில் இருக்கிறது. கடைசிப் போட்டி தொடரை நிர்ணயிக்கக் கூடியதாக அமைகிறது!