என்னோட 30 வருஷ கிரிக்கெட் உழைப்புக்கு, நல்ல பினிஷ் கிடைத்தது – ரிட்டையர்மெண்ட் அறிவித்த ராயுடு பேட்டி!

0
1511

30 வருடங்களாக கிரிக்கெட் மட்டுமே நினைத்து வரும் எனக்கு நல்ல பினிஷ் கிடைத்தது என்று ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு பேட்டி அளித்துள்ளார் அம்பத்தி ராயுடு.

ஐபிஎல் பைனல் நடக்குமா? நடக்காதா? என்று இருந்தபோது ஒரு வழியாக ரிசர்வ் நாள் அன்று சரியாக 7.30 மணி அளவில் துவங்கி முதல் இன்னிங்ஸ் நடைபெற்றது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இளம் வீரர் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 96 ரன்கள் குவித்தார். துவக்க வீரர் சகா 54 ரன்கள் அடித்தார். கடைசியில் வந்து நன்றாக ஃபினிஷிங் செய்து கொடுத்த ஹர்திக் பாண்டியா 21 ரன்கள் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் குவித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

இமாலய இலக்கை துரத்துவதற்கு களமிறங்கிய சிஎஸ்கே அணி மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் அடித்திருந்தபோது மழை வந்துவிட்டது. அதன் பிறகு நீண்ட நேரம் போட்டி தடைபட்டது. இறுதியாக 12.10 அளவில் 15 ஓவராக குறைக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. சிஎஸ்கே அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டிருந்தது.

சேஸ் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ருத்துராஜ் மற்றும் கான்வெ இருவரும் 6.3 ஓவர்களில் 74 ரன்கள் குவித்தனர். ருத்துராஜ் 26 ரன்கள், கான்வெ 47 ரன்கள் அடித்து அவுட்டாகினர்.

- Advertisement -

அடுத்துவந்த துபே ஒருமுனையில் நின்று அபாரமாக ஆடிக்கொடுத்தார். ராயுடு 19 ரன்கள், ரஹானே 27 ரன்கள் அடித்து வெளியேறினர்.

துபெ 32 ரன்கள் அடித்து களத்தில் நிற்க, கடைசியில் வந்து கடைசி இரண்டு பந்துகளில் 6 மற்றும் 4 அடித்து சிஎஸ்கே அணிக்கு பினிஷ் செய்து கொடுக்க, 5ஆவது முறையாக கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி.

- Advertisement -

இந்த சீஷனுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த அம்பத்தி ராயுடு, மும்பை அணியுடன் 3 முறை, சிஎஸ்கே அணியுடன் 3முறை என 6ஆவது முறையாக கோப்பையை வெல்கிறார். இந்த தருணம் குறித்து பேசிய அவர் கூறுகையில்,

“இது ஒரு கனவு மாதிரியான ஃபினிஷ். இதற்கு மேல் வேறு எதையும் நான் கேட்க முடியாது. என்னால் இதனை நம்பவில்லை. ஐபிஎல் வரலாறு முழுவதும் சிறந்த அணிக்காக நான் விளையாடியதை பெருமிதமாக கருதுகிறேன். குறிப்பாக இந்த வெற்றியை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது. ஏனெனில் கடந்த 30 வருடங்களாக தொடர்ந்து கிரிக்கெட்டை பற்றியே சிந்தித்து வரும் எனக்கு மிகச்சிறந்த பினிஷ் கிடைத்திருக்கிறது.

இத்தனை வருடங்களாக எனக்கு பக்க பலமாக இருந்தவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக என்னுடைய குடும்பம் மற்றும் என்னுடைய தந்தைக்கு இதை சமர்ப்பிக்கிறேன். அவர்கள் இல்லை என்றால் இவ்வளவு தூரம் சாத்தியமாகி இருக்காது.” என்றார்.