2023 ஐபிஎல்-ல் வாங்கியும் விளையாட வாய்ப்பு தரப்படாத 3 டிஎன்பிஎல் நட்சத்திர வீரர்கள்!

0
456
Tnpl2023

கிரிக்கெட் வடிவத்தில் புதிதாக வந்து சேர்ந்த t20 கிரிக்கெட் வடிவம் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டு வருகிறது. இது மற்ற வடிவ கிரிக்கெட்டுக்கான ரசிகர்களின் ஆதரவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது!

டி20 கிரிக்கெட் வந்ததற்குப் பிறகு உபரி பயனாக கிரிக்கெட் இதுவரை சென்றடையாத நாடுகளுக்கெல்லாம் போய்ச் சேர்ந்திருக்கிறது. கிரிக்கெட் இதன் மூலம் உலகமயமாகி வருகிறது.

- Advertisement -

மேலும் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் நாட்டில் டி20 கிரிக்கெட் லீக்குகளை நடத்துவதை தற்காலத்தில் வழக்கமாக்கி வருகின்றன. இதன் மூலம் கணிசமான ஒரு வருமானம் அந்தந்த கிரிக்கெட் வாரியங்களுக்குக் கிடைக்கிறது.

இந்த வகையில் உலகின் நம்பர் 1 டி20 லீக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் இருந்து வருகிறது. எந்த வகையிலும் இந்தத் தொடரை மிஞ்சிய டி20 லீக் வெளியில் கிடையாது. இந்தத் தொடருக்கு வாங்கப்பட்டு விளையாட வாய்ப்பளிக்கப்படாத தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 தொடரின் நட்சத்திர வீரர்கள் மூன்று பேரை இந்தச் சிறிய கட்டுரையில் பார்ப்போம்.

சோனு யாதவ் :

வலது கை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர், டிஎன்பிஎல் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் முதுகெலும்பான நட்சத்திர வீரராக, பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் இருந்து வருகிறார்.

- Advertisement -

கடந்த வருடம் இவரது டிஎன்பிஎல் செயல்பாட்டைப் பார்த்து ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. ஆனால் இந்த வருடம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இவருக்கு ஒரு வாய்ப்பு கூட அந்த அணியால் தரப்படவில்லை. இவர் கடந்த வருடம் மும்பை அணிக்காக வாங்கப்பட்ட சஞ்சய் யாதவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தீப் வாரியர் :

இதில் இவர் மட்டுமே இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் பங்கேற்ற வீரராக இருக்கிறார். இவர் இந்திய அணிக்காக 2021 ஆம் ஆண்டு ஒரு போட்டியில் விளையாடியிருக்கிறார்.
தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் இவர் தற்பொழுது நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா காயத்தின் காரணமாக இடம்பெறாததால் வலது கை வேகப்பந்துவீச்சாளரான இவரை அந்த இடத்திற்கு வாங்கினார்கள். ஆனால் இவருக்கு இந்த ஆண்டு அந்த அணியில் விளையாட வாய்ப்பு தரப்படவில்லை.

சாய் கிஷோர் :

இடது கை சுழற் பந்து வீச்சாளரான இவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காகவும், தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணிக்காகவும் விளையாடி வரும் நட்சத்திர வீரராக இருக்கிறார்.

கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டு விளையாட சில வாய்ப்புகளையும் பெற்றார். ஆனால் இவருக்கு இந்த வருடம் குஜராத் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு தரப்படவில்லை.