ஐபிஎல் 2023ல் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாத 5 கோடி மேல் சம்பளம் வாங்கும் 3 வீரர்கள்

0
1672
20230430_121105

ஐபிஎல் 16 வது சீசன் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் முதற்கட்ட போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து தற்பொழுது, விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால், புதிய வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளும், அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலும் போவதும் உண்டு. அந்த வகையில் இந்த சீசனில் 5 கோடிக்கு மேல் ஏலம் போனவர்கள் இன்னும் ஒரு போட்டியில் விளையாடாமல் உள்ளார்கள்.

- Advertisement -

அந்த பட்டியலை எடுத்துக் கொண்டால் முதல் வீரராக தென்னாப்பிரிக்கா விக்கெட் கீப்பரான குயின்டன் டீ காக் இடம் பெறுகிறார். இந்த சீசனில் லக்னோ அணியால் ஏலத்தில் 6.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரரான இவருக்கு இன்னும் அந்த அணியில் ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. அவரது இடத்தில் விளையாடும் கையில் மேயர்ஸ் சிறப்பாக விளையாடுவதால் அவருக்கான இடம் அணியில் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

இவருக்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல் வுட் இடம் பெறுகிறார். கடந்த வருட மெகா ஏலத்தில் பெங்களூரு அணியால் 7.75 கோடிக்கு எடுக்கப்பட்டார். கடந்த சீசனில் சிறப்பாக விளையாடியவர், இந்த சீசன் தொடங்குவதற்கும் காயத்தால் அவதிப்பட்டார். தற்பொழுது காயம் குணமடைந்து விட்டாலும் அதற்கான இடம் அணியில் வழங்கப்படவில்லை.

அடுத்ததாக இந்த லிஸ்டில் இடம் பெறுகிறார், இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் சிவம் மாவீ. கடந்த சீசனில் கொல்கத்தா அணையில் இடம்பெற்ற இவரை தற்போது நடந்து முடிந்த நேரத்தில் குஜராத் அணி 6 கோடிக்கு எடுத்தது. இவர் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தாலும் குஜராத் அணியில் இவருக்கான இடம் ஒதுக்கப்படவில்லை. குஜராத் அணி வலியிலும் இவருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் இவருக்கான வாய்ப்பு தற்போது வரை அந்த அணியும் கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

இதன் மூலம் குறைந்த ரூபாய்க்கு எடுக்கப்பட்ட வீரர்களுக்கும், அதிக ரூபாய்க்கு எடுக்கப்பட்ட வீரர்களுக்கும் என்ன வித்தியாசம்? ஐபிஎல் அணிகளில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் அணியில் விளையாடும் 11 வீரர்களை ஒருவராக தனக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று அனைவரிடமும் ஒரு கேள்வி எழும் அளவிற்கு இந்த ஐபிஎல் தொடர் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.