3 இந்திய அணி.. 3 கேப்டன்கள்.. அதிரடி திட்டத்தில் இறங்கும் பிசிசிஐ.. விறுவிறுப்பான தகவல்கள்!

0
17403
ICT

நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும் கூட, இந்திய கிரிக்கெட்டில் மாற்றங்கள் ஏற்படுவது உறுதியாகத்தான் இருந்தது.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் இல்லை என்று தெரிவித்திருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -

அதே சமயத்தில் பிசிசிஐ ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தாங்கள் எந்த வடிவத்தில் விளையாட வேண்டும் என்று தாங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று வாய்ப்பை திறந்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கத்தில் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக இந்திய அணியை வழிநடத்தக்கூடிய உடல் தகுதியில் கிடையாது. குறிப்பாக அவரால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை தொடர்ச்சியாக வழிநடத்த முடியாது என்று பிசிசிஐ நினைக்கிறது.

இதன் காரணமாக தற்பொழுது மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் மூன்று கேப்டன்களை நியமிக்கலாம் என்கின்ற முடிவில் பிசிசிஐ இருப்பதாக செய்திகள் வெளி வருகிறது.

- Advertisement -

ரோஹித் சர்மா அடுத்த டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இரண்டு ஆண்டுகள் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருக்க விரும்புகிறார் என்பது தெளிவான உறுதி. எனவே அவர் தொடர்ச்சியாக டெஸ்ட் கேப்டன் பொறுப்பை வகிப்பார்.

இதற்கு அடுத்து ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு ஹர்திக் பாண்டியா நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக விளையாடி கேப்டனாக இருக்க முடியாது. எனவே இந்த வடிவத்திற்கு கே எல் ராகுலை கேப்டனாக கொண்டுவர பிசிசிஐ விரும்புகிறது.

அதே சமயத்தில் அடுத்த வருடம் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை வரையில் இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக தொடர பிசிசிஐ சம்மதம் தெரிவித்து இருப்பதாக தெரிகிறது. மேற்கொண்டு இதிலும் மாற்றங்கள் வரலாம்.

இந்த வகையில் தற்பொழுது கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு வரவில்லை என்றால், மூன்று கேப்டன்கள் மூன்று வடிவத்திற்கு என்பது உறுதியாகி இருக்கிறதாக பிசிசிஐ வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன!