இந்தியா-ஜிம்பாப்வே 2வது ஒருநாள் லைவ்: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா; 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் ஜிம்பாப்வே!!

0
95

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வலுவான நிலையில் இருக்கிறது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். தீபக் சஹார் வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக ஷ்ராதுல் தாகூர் உள்ள எடுத்துவரப்பட்டார்.

- Advertisement -

இந்திய அணி, போட்டி துவங்கிய முதல் ஓவரில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் 4 ஓவர்கள் முடிவில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே ஜிம்பாப்வே அணி எடுத்தது. அதில் 2 மெய்டன் ஓவர்கள் அடங்கும். இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடித்து ரன் அடிக்க முடியாமல் சற்று பதட்ட நிலையில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் காணப்பட்டனர். போட்டியின் 9வது ஓவரில் துவக்க வீரர் கைட்டானோ, சிராஜ் பந்தில் ஆட்டம் இழந்தார். இவர் 32 பந்துகளுக்கு 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

முதல் போட்டியில் வெளியில் அமர்ந்திருந்த தாக்கூர், இன்றைய போட்டியில் அபாரமாக பந்துவீசி வருகிறார். தனது முதல் இரண்டு ஓவர்களில் தாக்கூர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. மூன்றாவது ஓவரில் இன்னொசென்ட் கையா (16), கேப்டன் சக்கப்வா (2) ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார். 12 ஓவர்கள் முடிவில் 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஜிம்பாப்வே அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது.

13 வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசியபோது இந்திய அணிக்கு மீண்டும் ஒரு விக்கெட் கிடைத்தது. பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜிம்பாவே வீரர் மதிவீரே, சஞ்சு சாம்சன் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை ஜிம்பாப்வே அணி இழந்திருந்தது. கடைசி 11 ரன்களில் மட்டுமே அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது.

- Advertisement -

மிகவும் தடுமாறி வந்த ஜிம்பாப்வே அணிக்கு நட்சத்திர வீரர் சிக்கந்தர் ராசா மற்றும் சீன் வில்லியம்சன் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டு வருகின்றனர். 20.1 ஓவர்கள் முடிவில் ஜிம்பாவே அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. ராசா 15 ரன்களும் வில்லியம்ஸ் 14 ரன்களும் அடித்திருந்தனர்.

பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் இருவரும் தலா ஒரு விக்கெட்டும் தாகூர் இரண்டு விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.

ஐந்தாவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 41 ரன்கள் சேர்த்திருந்தது. போட்டியின் 21 வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். நிதானமாக விளையாடி வந்த சிக்கந்தர் ராசா, பந்தை தவறாக கணித்து அடிக்க முயற்சித்த போது, இஷான் கிஷன் கேட்ச் பிடிக்க, 16 ரன்களில் அவர் ஆட்டம் இழந்தார். 22 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 76 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இன்றைய போட்டியில் களமிறங்கும் வீரர்களின் விவரம்

இந்திய அணி

ஷிகர் தவான், ஷுப்மான் கில், இஷான் கிஷன், கேஎல் ராகுல்(கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன்(கீப்பர்), அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

ஜிம்பாப்வே அணி

இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா(கீப்பர் மற்றும் கேப்டன்), ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நியுச்சி, தனகா சிவாங்கா.