2வது ரன் ஓடாத கோலி.. சலசலப்பான மைதானம்.. உண்மையில் நடந்தது என்ன?.. தப்பா புரிஞ்சிக்கிட்டாங்களே!

0
2119
Virat

பொதுவாக ஆசியக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணிக்கு நடந்து கொண்டிருக்கும் எல்லா விஷயங்களுமே, இந்திய அணிக்கு நல்ல விஷயங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன.

குறிப்பாக ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் விலக, அணிக்குள் அப்பொழுதுதான் வந்திருந்த கேஎல் ராகுல் சதம் அடித்தார்.

- Advertisement -

இப்படி இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு பெறக்கூடிய வீரர்கள் தங்களை நிரூபித்துக் கொண்டே வருகிறார்கள். யாரைத் தேர்ந்தெடுப்பது யாரை விடுவது என்கின்ற பெரிய நல்ல குழப்பம் இந்திய அணிக்கு இருந்து வருகிறது. நேற்று முகமது சமி ஐந்து விக்கெட்டுகள் எடுத்து, தன்னை வெளியில் வைக்க முடியாதபடி செய்திருக்கிறார்.

இதேபோல் நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், இந்திய அணி முதல்முறையாக இந்தத் தொடரில் ஆறு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் இழக்க ரவீந்திர ஜடேஜா விளையாடுவதற்கு உள்ளே வந்தார். மேலும் அவர் ஆட்டம் இழக்காமல் 39 ரன்கள் எடுத்தார். இதுவரை இந்திய பேட்டிங் யூனிட்டில் ரன் எடுக்காத ஒரு வீரராக இவர் மட்டுமே இருந்தார்.

போட்டியில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய உள்ளே வந்த பொழுது, சூரியகுமார் யாதவ் வேகமான ஒரு ரன்னுக்கு முயற்சி செய்து ரன் அவுட் ஆகி வெளியேறியிருந்தார். இந்தக் கட்டத்தில் இந்திய அணிக்கு கொஞ்சம் அழுத்தம் இருந்தது.

அப்போது ரவீந்திர ஜடேஜா அடுத்த ஒரு பந்துக்கு விராட் கோலி 2 ரன்கள் எடுக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். காரணம் நியூசிலாந்து வீரர்கள் அந்த நேரத்தில் உத்வேகம் பெற்று பீல்டிங்கில் மிக வேகமாக இருந்தார்கள். மேலும் அப்பொழுதுதான் ஒரு ரன் அவுட் ஆகி இருந்தது. எனவே விராட் கோலி நிதானமாக விளையாடும் மன நிலைக்கு மாற்றிக்கொள்ள முடிவு செய்து, இரண்டாவது ரன் எடுக்காமல் விட்டார்.

ஆனால் இதைச் சில தவறாகப் புரிந்து கொண்டு அவர் சதத்திற்காக அந்த நேரம் தானே விளையாட விரும்பினார் என்று கூறி வருகிறார்கள். அந்த நேரத்தில் விராட் கோலி அணி வெற்றி பெற தேவையான ரன்களுக்குத்தான் விளையாடினார். அணியின் வெற்றி உறுதியான பிறகு தான் சதத்தை நோக்கி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -