“22/4.. ஆப்கானிஸ்தான் அணி செய்ற இந்த விஷயம் சரி கிடையாது” – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

0
197
Afghanistan

நேற்று இந்திய அணிக்கு எதிராக மிக அதிக நேரம் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அணியாக ஆப்கானிஸ்தான் அணியே இருந்தது. அப்படி இருந்தும் அவர்கள் கடைசியில் போட்டியை கையில் இருந்து நழுவ விட்டார்கள்.

இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் டாஸ் வென்று பந்து வீசிய காரணத்தினால், நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான அணி மிகச் சிறப்பான முறையில் பவர் பிளேவில் பந்து வீசி 4.3 ஓவரில் 22 ரன்களுக்கு இந்திய அணியின் முக்கிய நான்கு விக்கெட்டுகளை சாய்த்தது.

ஆனால் மீதமிருந்த 16.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாமல் 190 ரன்கள் கொடுத்தது. இதற்கு அடுத்து வந்து போராடியது என்றாலும், கிடைத்த வாய்ப்பை அந்த இடத்தில் பயன்படுத்திக் கொள்ளாமல் ஆப்கானிஸ்தான் கோட்டை விட்டது, இந்திய அணிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க முதல் வெற்றியை பெறவிடாமல் செய்துவிட்டது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “22/4 பரித் அஹமத் எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தார். விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் கோல்டன் டக் ஆனார்கள். ஜெய்ஸ்வால் 4 மற்றும் சிவம் துபே 1 ரன்னில் வெளியேறினார்கள். இந்த இடத்தில் இந்தியா அசிக்கியது. ஆனால் அங்கிருந்து எல்லாம் வித்தியாசமாக நடக்க ஆரம்பித்தது.

ரோகித் சர்மா நேற்று அவருடைய சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்னை பதிவு செய்து ஐந்தாவது சதத்தை அடித்தார். ரிங்கு சிங்கும் 69 ரன்கள் எடுத்தார். கரீம் ஜனத்தின் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் உட்பட 36 இடங்கள் எடுக்கப்பட்டன.

நினைவில் கொள்ளப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நேற்றைய ஆடுகளம் மெதுவானதாகவும் வறண்டதாகவும் இருந்தது. இதில் எங்களுடைய நான்கு வீரர்கள் ஆட்டம் இழந்தார்கள். அவர்களுடைய ஷாட் செலக்சன் மிகவும் மோசமாக இருந்தது.

அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான் அணி நேற்று நிறைய மாற்றங்களை செய்தது. அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். தொடரை வென்ற பிறகும் தோற்ற பிறகும் இவ்வளவு பெரிய மாற்றங்களை செய்வது சரியானது கிடையாது.

அவர்கள் மொத்தமாக தங்களது வழக்கமான முழு பவுலிங் யூனிட்டயும் மாற்றினார்கள். நேற்று பழைய பவுலிங் யூனிட் இருந்திருந்தால் 22/4 என்கிற நிலையில் இருந்து இந்திய அணியை இந்த அளவுக்கு வர விட்டு இருக்க மாட்டார்கள்” என்று சுட்டிக் காட்டி இருக்கிறார்.

- Advertisement -