இந்திய கிரிக்கெட்

வெறும் 90 ரன்.. இலங்கை அணியை வீழ்த்திய இந்தியா.. செமி பைனலுக்கு காத்திருக்கும் செக்.. மகளிர் டி20 உலக கோப்பை 2024

இன்று மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கான வாய்ப்பை அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணியை வென்று, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை விட ரன் ரேட்டில் மேலே இருந்தால் மட்டுமே அரை இறுதிக்கு செல்ல முடியும் என்கின்ற சூழ்நிலை இருந்த நிலையில், தற்போது இலங்கை அணியை நல்ல ரன் ரேட்டில் வென்று இருக்கிறது.

சரியான நேரத்தில் மாஸ் காட்டிய சீனியர்கள்

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா 40 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து ஸ்மிருதி மந்தனா 38 பந்தில் 50 ரன்கள், கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 27 பந்தில் ஆட்டம் இழக்காமல் அதிரடியாக 52 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியின் டாப் ஆர்டரின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ரன்கள் குவித்தது. மேலும் இந்திய அணி அதிக ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

- Advertisement -

ஆசிய சாம்பியன் இலங்கையை சுருட்டிய இந்தியா

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் சமாரி அட்டப்பட்டு 3 பந்தில் ஒருவன் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கடுத்து இலங்கை அணிக்கு அதிகபட்சமாக கவிஷ்கா தில்ஹரி 22 பந்தில் 21, அனுஷ்கா சஞ்சீவன் 22 பந்தில் 20 ரன்கள் எடுத்தார்கள்.

இறுதியாக 19.5 ஓவரில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 90 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது. மேலும் இந்திய அணியின் தரப்பில் பந்துவீச்சில் அருந்ததி ரெட்டி மற்றும் ஆஷா ஷோபனா இருவரும் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க : தோனி பாய் கிட்ட பேசின அதுதான் உதவுது .. நிதிஷ் அதிரடி காட்ட காரணமே இதுதான் – ரிங்கு சிங் பேட்டி

தற்போது இந்திய அணி புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை தாண்டி ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஆனாலும் கடைசி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை கட்டாயமாக வீழ்த்த வேண்டும். மேலும் நியூசிலாந்து அணி தனது கடைசி இரண்டு போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஏதாவது ஒரு போட்டியில் தோற்க வேண்டும். இல்லையென்றால் இந்திய அணியை விட ரன் ரேட்டில் பின்னால் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுதுதான் இந்திய அணி அரையிறுதிக்குள் செல்ல முடியும்.

- Advertisement -
Published by

Recent Posts