“2024 டி20 உலக கோப்பை.. தோனி கேப்டனா வரனும் வருவாரு!” – தமிழக வீரர் பரபரப்பான பேச்சு!

0
371
Dhoni

மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு தலைமையேற்று 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்று கொடுத்திருக்கிறார்.

இதற்குப் பிறகு இந்திய அணி ஐசிசி தொடர்களின் அரையிறுதியில் வெல்ல முடியாமலும், தற்போது நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியை வெல்ல முடியாமலும் என தொடர்ச்சியாக ஐசிசி தொடர்களை இழந்து கொண்டே இருக்கிறது.

- Advertisement -

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அணி மிகச் சிறப்பாக நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அமைந்து இருந்தது. ஏறக்குறைய அணியில் இடம் பெற்று இருந்த வீரர்களில் எல்லா வீரர்களுமே தனியாக ஆட்டத்தை வென்று கொடுக்கக் கூடியவர்களாக தெரிந்தார்கள்.

மேலும் இந்திய அணிக்கு கட்டாயம் ஃபார்மில் இருந்தே ஆக வேண்டிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறந்த பார்மில் இருந்தார்கள். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எப்பொழுதும் அமையாத மிகச்சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சு படை அமைந்தது. ஆனாலும் இந்திய கிரிக்கெட் அணியாய் ஐசிசி உலகக் கோப்பை எனும் கரையை கடக்க முடியவில்லை.

இது இந்திய ரசிகர்களிடையே மற்றும் இந்திய முன்னாள் வீரர்கள் இடையே மிகப் பெரிய ஏமாற்றத்தையும் மனவருத்தத்தையும் உண்டாக்கி இருக்கிறது. இதன் காரணமாக எப்படியாவது இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதாக பேசி வருகிறார்கள்.

- Advertisement -

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. எனவே தற்போது பேச்சு இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி என்ன செய்தால் கோப்பையை வெல்லலாம்? என்பதாக மாறி இருக்கிறது.

இதுகுறித்து தமிழகத்தின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான நானி கூறும் பொழுது “தோனி தற்பொழுது ஐபிஎல் தொடர் விளையாட்டு வருகிறார். விக்கெட் கீப்பராகவும் பினிஷர் ஆகவும் அவர் தகுதியாகவே இருக்கிறார். இந்த வருடம் ஐபிஎல் கோப்பையையும் வென்று இருக்கிறார்.

இப்படி இருக்கும் பொழுது அவர் ஏன் இந்திய டி20 அணிக்கு குறிப்பாக டி20 உலகக்கோப்பைக்கு கேப்டனாக வரக்கூடாது?! அவர் கேப்டனாக வந்து ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக வைத்து பயிற்சி அளிக்கலாமே?! அப்படி அவர் கேப்டனாக வந்தால் நிச்சயம் டி20 உலகக்கோப்பையை வெல்லலாம். அவர் வரவேண்டும். அவர் வருவார் என்றும் நான் சொல்கிறேன். இது என்னுடைய கணிப்பாக நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறியிருக்கிறார்!