ஆஸி வெளியிட்ட 2023 உலக டெஸ்ட் டீம்.. ஆச்சரியமான 2 இந்திய வீரர்களுக்கு இடம்!

0
966
Root

தற்பொழுது ஆஸ்திரேலியா அணி உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இந்தத் தொடரில் தற்பொழுது இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற முடிவுக்கு வந்திருக்கின்றன. இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றி விட்டது.

- Advertisement -

இதையடுத்து அடுத்த ஆண்டின் துவக்கத்தில் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது. சிட்னியில் நடைபெறும் இந்த போட்டியுடன் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வருடம் முடிய இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த உலக டெஸ்ட் அணியை அறிவித்திருக்கிறது. அதில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓய்வு பெற இருக்கும் டேவிட் வார்னருக்கும் இடம் கொடுக்கப்படவில்லை.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்த ஆண்டு உலக டெஸ்ட் அணியின் துவக்க வீரர்களாக தங்கள் அணியின் உஸ்மான் கவஜா மற்றும் இலங்கை அணியின் டெஸ்ட் கேப்டன் திமுத் கருணரத்தினே இருவரையும் வைத்திருக்கிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து மூன்று மற்றும் நான்காம் இடங்களில் தங்கள் அணியின் மார்னஸ் லபுசேன் மற்றும் ஸ்மித் இருவருக்கும் அதிரடியாக இடம் கொடுக்கப்படவில்லை. இந்த இடங்களில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் இருவரும் இருக்கிறார்கள். ஐந்து மற்றும் ஆறாம் இடங்களில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் மற்றும் அயர்லாந்தின் விக்கெட் கீப்பர் லோரன் டக்கர் இருவரையும் கொண்டு வந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

மேலும் ஏழு மற்றும் எட்டாவது இடங்களில் இந்தியாவின் சுழற் பந்துவீச்சு கூட்டணி மற்றும் ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவருக்கும் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணியில் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்காவின் ரபாடா, இந்த வருடம் ஓய்வு பெற்ற இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். மேலும் இந்த அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள 2023 ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் டீம்:

உஸ்மான் கவாஜா, திமுத் கருணரத்தினே, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், லோரன் டக்கர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் பேட் கம்மின்ஸ், ரபாடா மற்றும் ஸ்டூவர்ட் பிராட்.