இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியை இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. இதைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அணிகளின் இடங்கள் குறித்தும், சவால்கள் குறித்தும் பார்க்கலாம்.
தற்போது 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை ஆக்ரோஷமாக மட்டுமே விளையாடுவோம் என நிறைய நஷ்டப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் நிறைய விமர்சனங்கள் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் கடைசியில் ஒன்பதாவது இடத்தில் இருந்த இங்கிலாந்து இந்த வெற்றியின் மூலமாகவும் ஒன்பதாவது இடத்திலேயே இருக்கிறது. அதே சமயத்தில் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டிஸ் அணி இருந்த ஆறாவது இடத்திலேயே தொடர்கிறது.
மேலும் முதல் மூன்று இடங்களில் இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இருக்கின்றன. இந்திய அணியை பொறுத்தவரையில் அடுத்து பங்களாதேஷ் நியூசிலாந்து அணிகளை இந்தியாவில் வைத்து டெஸ்ட் தொடரில் சந்திக்கிறது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. குறிப்பாக உள்நாட்டில் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற ஆக வேண்டும். இப்படி நடந்தால் இந்திய அணி மீண்டும் தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நுழையும்.
அதேசமயத்தில் அடுத்த மூன்று இடங்களில் இலங்கை பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இருக்கின்றன. அடுத்த மூன்று இடங்களில் சவுத் ஆப்பிரிக்கா பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகள் இருக்கின்றன. இந்த அணிகள் மீதமிருக்கும் போட்டிகளை வெற்றிக்காக விளையாடும் மற்றபடி இறுதி போட்டிக்கான வாய்ப்புகள் குறைவு.
இதையும் படிங்க : முதல்ல டீமை விட்டு கிளம்ப சொல்லுங்க.. ஸ்ரீ சாந்திடம் கோபப்பட்ட தோனி.. அஸ்வின் வெளியிட்ட தகவல்
2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :
இந்தியா – 68.51
ஆஸ்திரேலியா – 62.50
நியூசிலாந்து – 50.00
ஸ்ரீலங்கா – 50.00
பாகிஸ்தான் – 36.66
வெஸ்ட் இண்டிஸ் – 26.67
சவுத் ஆப்பிரிக்கா – 25.00
பங்களாதேஷ் – 25.00
இங்கிலாந்து – 25.00