2022 உலக கோப்பை இந்திய வீரர் திடீர் ஓய்வு ?.. விரக்தியில் செய்த காரியத்தால் ரசிகர்கள் கவலை!

0
2404

இந்திய அணியின் முன்னணி வேகுபந்துவீச்சாளராக விளங்கியவர் புவனேஸ்வர் குமார். 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார் .

அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து ஒரு நாள் போட்டி தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பெற்ற இவர் தன்னுடைய ஸ்விங் பந்துவீச்சின் மூலம் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தார். ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்த புவனேஸ்வர் குமார் 2013 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.

- Advertisement -

அனுபவ வேகப் பந்துவீச்சாளர்கள் ஓய்வு பெற்றிருந்த நிலையில் இந்திய அணியின் இளம் வேகபந்து வீச்சாளர்களை திறம்பட வழி நடத்தியவர். 2013 ஆம் ஆண்டின் இந்திய அணியின் சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியில் முக்கிய பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த இவருக்கு காயங்கள் மிகப்பெரிய பிரச்சனை ஆக அமைந்தது. தொடர் காயங்களின் காரணமாக 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2019 ஆம் ஆண்டின் உலக கோப்பையிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய இவர் அதன் பிறகு எந்த லீக் ஆட்டங்களிலும் விளையாடவில்லை. நியூசிலாந்து அணியுடன் அரை இறுதி போட்டியில் தான் இந்தியா அணிக்குள் மீண்டும் இடம் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் போட்டிகளில் இருந்தும் ஓரங்கட்ட பட்ட இவர் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பிறகு நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் பங்கேற்ற இவர் அதன் பிறகு இந்திய அணிக்கு திரும்பவே இல்லை .

ஐபிஎல் 2023 அனைத்து போட்டிகளிலும் மோனிஷ்குமார் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . ஐபிஎல்-லை தொடர்ந்து இந்திய அணி தற்போது விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டி மற்றும் டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை . இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பேரை மாற்றி இந்தியன் என்று மட்டுமே பதிவு செய்திருக்கிறார் புவனேஸ்வர் குமார் . இது ரசிகர்களிடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது .

- Advertisement -

இதனால் புவனேஸ்வர் குமார் விரைவிலேயே ஓய்வு அறிவிக்கப் போகிறாரா அல்லது அந்த முடிவை எடுத்து விட்டாரா என ரசிகர்கள் கடும் குழப்பத்தில் இருக்கின்றனர் . இதற்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பயோ இந்தியன் கிரிக்கெட்டர் என்று வைத்திருந்த அவர் தற்போது கிரிக்கெட்டில் என்பதை நீக்கிவிட்டு இந்தியன் என்று மட்டும் வைத்திருக்கிறார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சிகர்கள் இடையே கடும் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது

இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் புவனேஸ்வர் குமார் 63 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இவரது சிறந்த பந்துவீச்சு 82/6 ஆகும் இந்திய அணிக்காக 121 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர் 141 கிரிக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும் 87 சர்வதேச t20 போட்டிகளில் விளையாடு இருக்கும் புவனேஸ்வர் குமார் 90 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். டி20 போட்டிகளில் இவரது சிறப்பான பந்துவீச்சு 4/5 ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆசிய கோப்பையில் கைப்பற்றியதாகும். திறமையான பந்துவீச்சாளரான இவர் காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது துரதிஷ்டவசமானது.