2022 ஆசியக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

0
4211
Asia cup

வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்டில் 6 ஆசிய நாடுகளை கொண்டு ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. இந்தக் கிரிக்கெட் போட்டி தொடர் 20 ஓவர் வடிவத்தில் நடக்க இருக்கிறது!

இதில் ஆறு அணிகளை இரண்டு பிரிவாக பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளைக் கொண்டு சூப்பர் 4 எனும் சுற்று நடத்தப்படுகிறது. இதில் நான்கு அணிகளும் தலா ஒரு போட்டியில் மற்ற மூன்று அணிகளை எதிர்த்து விளையாட வேண்டும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்தத் தொடரின் இறுதி போட்டி செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடக்க இருக்கிறது!

- Advertisement -

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள குழுவில் இந்திய அணியோடு பாகிஸ்தான் அணி இருக்கிறது. மேலும் ஆசிய கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியில் வெல்லும் ஒரு ஆசிய அணி இந்திய பாகிஸ்தான் அணிகள் இருக்கும் குழுவில் இடம்பெறும்.

இந்த வகையில் எடுத்துக்கொண்டால் இந்தியா பாகிஸ்தான் அணிகள் முதல் சுற்றில் ஒரு முறையும், சூப்பர் 4 சுற்றில் ஒரு முறையும் மோதுவது உறுதியான ஒன்றாகவே தெரிகிறது. மேலும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சிறப்பாக செயல்பட்டால், ஒரே தொடரில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதும் நிகழ்வும் அரங்கேறும்!

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை நடக்க இருக்கிறது. அதற்கான ஒரு முழுமையான டி20 அணியைக் கட்டமைப்பவதற்காக இந்திய அணி தொடர்ந்து டி20 தொடர்களில் பல பரிசோதனை முயற்சிகளை செய்து வந்தது.

- Advertisement -

தற்பொழுது ஆசிய கோப்பைக்காக அமைக்கப்படும் இந்திய அணியே, ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கும் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த அளவில் ஆசிய கோப்பைக்காக அறிவிக்கப்படும் இந்திய அணியின் முக்கியத்துவமானது!

சற்றுமுன் ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி ஆசிய கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கான தேர்வில் காயத்தால் ஜஸ்பிரித் பும்ராவும் ஹர்சல் படேலும் கணக்கில் எடுக்கப்படவில்லை. மேலும் தீபக் சகர், ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் ஆகியோரும் தேர்வு செய்யப்படவில்லை!

- Advertisement -

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா, கே எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, ஆர் அஸ்வின், யுஸ்வேந்திர சாகல், ரவி பிஷ்னோய், புவனேஸ்வர் குமார், ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங்.