“2019 உ.கோ-ல ரோகித் செஞ்சத இப்ப இவர் செய்வார்.. சாதாரண ஆள் கிடையாது!” – சுரேஷ் ரெய்னா உறுதியான பேச்சு!

0
1492
Raina

ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக, கொஞ்சம் பலவீனமாக காணப்பட்ட இந்திய அணி, ஆசியக் கோப்பைக்கு பின்பாக மிக பலமான அணியாகத் தெரிகிறது.

அணியின் பேட்டிங் வரிசையில் ரவீந்திர ஜடேஜா தவிர வாய்ப்பு பெற்ற அனைவரும் மிகச் சிறப்பாக தங்களது வேலையைச் செய்திருக்கிறார்கள். அதேபோல பந்துவீச்சில் வாய்ப்பு பெற்ற அனைவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணி உலகக்கோப்பையில் மிக வலுவான பந்துவீச்சு யூனிட்டை கொண்டிருக்கும் அணியாக இருக்கிறது. அதே சமயத்தில் பேட்டிங்கிலும் சிறப்பான ஒரு அணியாகவே இருந்து வருகிறது.

இந்த ஆண்டு முழுவதும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் சுப்மன் கில் நடுவில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தடுமாறினார். இந்திய அணிக்கு இது கவலைக்குரிய விஷயமாக மாறியது. ஆனால் ஆசிய கோப்பையில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேனாக வெளிவந்து அசத்தினார்.

இந்த நிலையில் இவர் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா “கில் மனநிலை இத்துடன் நிற்காது. 2019 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா உலக கோப்பையில் என்ன செய்தாரோ அதை அவராலும் செய்ய முடியும். அவர் பேட்டிங் செய்ய 50 ஓவர்கள் கிடைக்கும். எனவே அவர் பேட்டிங்கில் இது டேக் ஆப் பாயின்ட் என்று நினைக்கிறேன். அவரிடம் இயல்பாகவே தலைமை குணம் இருக்கிறது. அதை அவர் தனது விளையாட்டில் காட்டுகிறார்.

- Advertisement -

அவர் கடந்த ஒன்றரை வருடங்களாக சிறந்த செயல்பாட்டை கொண்டு இருக்கிறார். நடுவில் வெஸ்ட் இண்டிஸ் தொடரில் கொஞ்சம் தடுமாறினார். அவர் திரும்பி வந்து ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த விதம், அவர் நேர்மறையாக இருக்கிறார் என்று காட்டுகிறது.

தற்பொழுது அவர் 40 ரன்களில் ஆட்டம் இழப்பதை தவிர்த்து ஃபுட் ஒர்க்கை நன்றாக பயன்படுத்தி 50 மற்றும் 100 ரன்களுக்கு செல்கிறார். உலகக்கோப்பையில் இவர் முக்கியமான வீரர்களில் ஒருவராக இருப்பார்.

அவர் சூப்பர் ஸ்டாராக வேண்டும் அடுத்த விராட் கோலி ஆக வேண்டும் என்று விரும்புகிறார் என்று எனக்குத் தெரியும். இந்த உலகக் கோப்பைக்கு பிறகு நாம் அவர் குறித்து அதிகம் பேசுவோம். அவர் நன்றாக ஃபார்மில் இருக்கும் பொழுது அவருடைய கை வேகம் அபாரமாக இருக்கிறது.

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அவருக்கு எங்கு பந்து வீசுவது என்று தெரியவில்லை. வேகப்பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்யவில்லை என்றால், அவர் நேராகவோ அல்லது பிளிக் ஆகி விடுவார். அவரை தடுப்பது மிகவும் கடினமானது!” என்று கூறி இருக்கிறார்!