2017 2022 2023 விராட் கோலியை விடாமல் துரத்தும் ஏப்ரல் 23ஆம் தேதியின் மர்மம் ; என்னதான் நடக்கிறது!

0
1502
Virat kothi

விடுமுறை நாளான இன்று ஐபிஎல் 16 வது சீசனில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. மதியம் நடைபெறும் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். பெங்களூர் அணியில் ஒரு மாற்றமாக பர்னலுக்கு பதிலாக வில்லி இடம் பெற்றார்.

- Advertisement -

பெங்களூர் அணிக்கு துவக்கம் தர கேப்டன் பாப் உடன் வந்த விராட் கோலி ஆட்டத்தை துவங்க ஸ்ட்ரைக் எடுத்தார். முதல் ஓவரை நியூசிலாந்து இடது கை வேகபந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் வீச வந்தார்.

பெங்களூர் அணி ரசிகர்கள் சொந்த மைதானத்தில் விராட் கோலியின் ஆட்டத்தை கண்டுகளிக்க பொருத்த ஆவலுடன் குவிந்திருந்த வேளையில், போட்டிக்கான முதல் பந்தை இன் ஸ்விங்காக டிரென்ட் போல்ட் விராட் கோலிக்கு வீச, அந்தப் பந்தை விராட் கோலி அக்ராஸ் ஆட முயற்சி செய்ய, பந்து அவரை ஏமாற்றி கால் காப்பில் போய் மோதியது. போல்ட் நடுவரிடம் அப்பில் செய்ய, நடுவர் எந்தவித சந்தேகமும் இல்லாமல் உடனே அவுட் கொடுக்க விராட் கோலி பரிதாபமாக வெளியேறினார்.

விராட் கோலி கடந்த ஆண்டு மூன்று முறை இப்படி முதல் பந்தியிலேயே வெளியேறி கோல்டன் டக் ஆகி இருந்தார். இந்த முறையும் இது தொடர்கிறது. ஆனால் இதில் ஒரு வினோதமான ஒற்றுமையும் இருக்கிறது. அது என்னவென்றால் ஏப்ரல் 23ஆம் தேதி!

- Advertisement -

இதுவரை ஏப்ரல் 23ஆம் தேதி மூன்று முறை தான் சந்தித்த முதல் பந்தியிலேயே விராட் கோலி கோல்டன் டக் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார். இந்த வினோத ஒற்றுமை இப்பொழுது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

முதன் முதலில் 2017 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக நாதன் குல்டர் நைன் பந்தில் மணிஷ் பாண்டேவிடம் வெளியேறியிருந்தார். இதற்கு அடுத்து 2022 ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக யான்சன் பந்துவீச்சில் மார்க்ரம் இடம் வெளியேறியிருந்தார். தற்பொழுது எல்பிடபிள்யு மூலம் போல்ட் இடம் வெளியேறி இருக்கிறார்.

கொல்கத்தா அணிக்கு இப்படி விராட் கோலி முதல் பந்திலேயே வெளியேறிய பொழுது பெங்களூரு அணி 49 ரன்களில் சுருண்டு ஐபிஎல்லில் குறைந்த ரண்களுக்கு சுருண்ட அணி என்ற மோசமான சாதனையை படைத்திருந்தது. இதற்கு அடுத்து கடந்த ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிராக விராட் கோலி முதற்பந்திலேயே வெளியேறிய பொழுது 68 ரன்களுக்கு சுருண்டு இன்னொரு மோசமான சாதனையையும் செய்தது. ஆனால் இந்த முறை அப்படி ஒரு மோசமான சாதனையில் இருந்து மேக்ஸ்வெல் காப்பாற்றி அணியைக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.