2011 உலகக் கோப்பை அயர்லாந்து ஹீரோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு- ட்விட்டர் வீடியோ லிங்க்!

0
118
Ireland

2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து விளையாடிய ஒரு போட்டி யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவைக் கொண்டு முடிந்தது. இந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணியில் இருந்து ஒரு புதிய கதாநாயகன் உருவானார். அவர்தான் வலது கை மித வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கெவின் ஓ பிரையன்.

இந்தியாவில் பெங்களூர் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து 50 ஓவர்களின் முடிவில் 327 ரன்களை 8 விக்கெட் இழப்பிற்கு குவித்தது. இன்று மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய கத்துக்குட்டி அயர்லாந்து அணி 22.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை 106 இவங்களுக்கு இழந்து தோல்வியின் பிடியில் இருந்தது. அப்போது களமிறங்கிய கெவின் ஓ பிரையன் அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 113 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இது அப்போது உலக கோப்பை போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் மிகவிரைவாக அடித்த சதம் ஆகும். இந்த போட்டியை இந்திய ரசிகர்கலளே பலபேர் மறந்திருக்க மாட்டார்கள்.

- Advertisement -

2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், 2008 ஆம் ஆண்டு டி20 போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராகவும், 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும் இவர் அயர்லாந்து அணிக்காக அறிமுகம் ஆனார். அயர்லாந்து அணிக்காக 153 ஒருநாள் போட்டிகளிலும், மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், 110 டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

அயர்லாந்து அணியில் மிகமுக்கியமான வீரராக விளங்கிய இந்த 37 வயது ஆல்ரவுண்டர் தற்போது டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இருக்கும்பொழுது, திடீரென்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

அவர் தனது ஓய்வு அறிக்கையில் ” 16 வருடங்கள் எனது நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடிய பிறகு இன்று ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாடி விட்டு ஓய்வு பெறலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு நான் அயர்லாந்து அணிக்கு தேர்வாகவில்லை. தேர்வாளர்கள் வேறு திட்டத்தில் இருக்கிறார்கள் என்று உணர்கிறேன். இந்த நாள் நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்!

- Advertisement -

இங்கிலாந்து அணியுடன் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் அதிரடியாக அவர் சதம் விளாசிய வீடியோவின் டிவிட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!