கிரிக்கெட்

1983 உலககோப்பையை வென்ற வீரர், புதிய பிசிசிஐ தலைவராகிறார்!

முன்னாள் இந்திய வீரர் ரோஜர் பின்னி அடுத்த பிசிசிஐ தலைவராக வருகிறார் என்று பேச்சுக்கள் பரவலாக அடிபடுகின்றன. இதற்கான அறிவிப்பு அக்டோபர் 18ஆம் தேதி வெளியிடப்படும் என தெரியவந்துள்ளது.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மேற்கு வங்காள கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தார். 2019 ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐசிசி எலைட் உறுப்பினர்கள் கமிட்டியில் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டார். அணில் கும்ப்ளே பதவிக்காலம் முடிவடைந்ததால் அந்த இடத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சௌரவ் கங்குலி தனது பிசிசிஐ பதவி காலத்தில் அதிகமாக பிசிசிஐ செயலாளர் ஜே ஷா, பொருளாளர் அருண் துமாள் ஆகியோருடன் நீண்ட காலம் பயணித்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுரவ் கங்குலி ஐசிசி சேர்மன் பதவிக்கு போட்டியிட உள்ளார். அதில் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் பல வதந்திகள் வெளியாகின. ஆனால் அதன்படி எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் டெல்லியில் அக்டோபர் 5ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. இந்த சந்திப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன், அசாம் மாநிலத்தின் முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். இதில் பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அதில் ஒன்றாக பிசிசி தலைவர் பதவியில் இருந்து சவுரவ் கங்குலி பதவிக்காலம் முடிவடைகிறது. மீண்டும் பிச்சிஐ தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். ஜேய் ஷா தொடர்ந்து செயலாளர் பதவியிலும், அருண் துமால் பொருளாளர் பதவியிலும் தொடர்ந்து நீடிக்க உள்ளனர்.

ராஜீவ் சுக்லா, அனிருத் சவுத்ரி, ரோகன் ஜெட்லி உள்ளிட்டோர் பிசிசிஐ மேல்மட்ட குழுவின் உறுப்பினர் பதவியில் நீடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இவர்களுக்கு ஐபிஎல் நிர்வாகத்திலும் சில பதவிகள் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அடுத்த பிசிசிஐ தலைவர் பதவிக்கு 3 பேர் பெயர் அடிப்படுவந்தது. தற்போது 1983ம் ஆண்டு உலககோப்பையை வென்ற இந்திய அணியின் ஆல்ரவுண்டர் மற்றும் முன்னாள் அண்டர்-19 அணியின் பயிர்ச்சியாளர் ரோஜர் பென்னி பெயர் பரவலாக அடிபடுகிறது. இவர்தான் யோக மனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்றும் தெரிகிறது.

பிசிசிஐ தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி:

பிசிசிஐ தலைவர் பதவிக்கான தேர்தலில் அக்டோபர் 11 மற்றும் 12ஆம் தேதி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் அக்டோபர் 13-ம் தேதி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் அக்டோபர் 14ஆம் தேதி வரை விண்ணப்பங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அக்டோபர் 15ஆம் தேதி தலைவர் பதவிக்கு போட்டியிடும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் அக்டோபர் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற முடிவுகளும் அறிவிக்கப்படும்.

Published by