போட்டி 15 ஓவர்களாக குறைப்பு… 12.10 மணிக்கு துவங்கும்… டார்கெட் எவ்வளவு? – வெளிவந்த அப்டேட்!

0
231

மழை காரணமாக பாதியில் தடைபட்ட ஐபிஎல் பைனல் 15 ஓவர்களாக குறிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணிக்கு எவ்வளவு டார்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை பின்வருமாறு காண்போம்.

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் பைனல் 28ஆம் தேதி நடைபெறவிருந்தது. அப்போது இடைவிடாமல் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டு ரிசர்வ் நாளுக்கு மாற்றப்பட்டது.

- Advertisement -

ரிசர்வ் நாளன்று, நாள் முழுவதும் வெயில் அடித்ததால் மழையின் குறுக்கீடு பெரிதளவில் இருக்காது. அதிகபட்சமாக இரவு 9 மணிக்கு மேல் மழை வரலாம் என்றும் வானிலை அறிவிப்புகள் தெரிவித்திருந்தன.

குறிப்பிட்ட நேரப்படி 7.30 மணிக்கு போட்டி துவங்கியது. இதில் சிஎஸ்கே அணி முதலில் பவுலிங் எடுத்ததால் குஜராத் அணி பேட்டிங் இறங்கியது. மிகச்சிறந்த பார்மில் இருந்த கில் 39 ரன்கள் அடித்து அவுட்டானார்.

தடுமாறி வந்த சகா பைனலில் அபாரமாக விளையாடி, 39 பந்துகளுக்கு 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பைனலில் இருப்பாரா? மாட்டாரா? என்கிற சந்தேகத்திலிருந்து சாய் சுதர்சன் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 47 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உட்பட 96 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்கள் குவித்தது குஜராத் அணி. சிஎஸ்கே அணிக்கு 215 ரன்கள் எனும் இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் சிஎஸ்கே அணி பேட்டிங் இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்று தண்ணீர் வெளியேற்றப்பட்டவுடன் மீண்டும் போட்டி துவங்கியது.

ருத்துராஜ், கான்வெ இருவரும் உள்ளே வந்தனர். 3 பந்துகள் மட்டுமே வீசுப்பட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் அடித்திருந்தது. அந்த சமயத்தில் மீண்டும் மழைப்பொழிவு வேகமாக வந்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

முதலாவதாக 10 மணி மற்றும் 10.30 மணி அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. பின்னர் 11 மணி மற்றும் 11.30 மணி அளவில் மீண்டும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. மழை நின்றுவிட்டது, ஆனால் தண்ணீரை வெளியேற்ற தாமதம் ஆனது.

11.45 மணியளவில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், போட்டி 15 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது. போட்டி சரியாக 12.10 மணியளவில் ஆட்டம் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 15 ஓவர்களில் சிஎஸ்கே அணிய 171 ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.