இன்று சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் வெளியிட்டார். மேலும் அவரும் இந்தியா கேப்டன் ரோஹித் சர்மாவும் பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மற்றும் துபாய் என இரு நாடுகளில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது. தற்போது இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்த அறிமுகம்
தற்போது மிகச் சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருந்து வரும் இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இன்னொரு துவக்க ஆட்டக்காரரான கில் துணை கேப்டன் பதவியில் தொடர்கிறார்.
மேலும் இரண்டாவது விக்கெட் கீப்பர் யார்? என்கின்ற கேள்விக்கு விடையாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் மிடில் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.
திரும்ப வந்த பும்ரா
மேலும் இந்த அணியில் காயத்திலிருந்து திரும்பி இருக்கும் பும்ரா இடம் பெற்று இருக்கிறார். மேலும் வேகப் பந்து வீச்சு யூனிட்டில் ஷமி மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். மிக முக்கியமாக முகமது சிராஜிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று வந்த அவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் இந்த அணியில் ஆச்சரியப்படத் தக்க வகையில் மீண்டும் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். சுழல் ஆல் ரண்டர்களாக அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்று இருக்க முக்கிய ஸ்பின்னராக குல்தீப் யாதவ் இடம் பெற்று இருக்கிறார்.
இதையும் படிங்க : துபாய்ல எங்களுக்கு இந்த அட்வான்டேஜ் இருக்கு.. ரோகித் விராட்டுக்கு இது ஒரு பொருட்டே கிடையாது – பகார் ஜமான் பேட்டி
ரோஹித் சர்மா (கே)
சுப்மன் கில் (து.கே)
விராட் கோலி
ஷ்ரேயாஸ் ஐயர்
கேஎல் ராகுல்
ஹர்திக் பாண்டியா
அகார் படேல்
வாஷிங்டன் சுந்தர்
குல்தீப் யாதவ்
ஜஸ்பிரித் பும்ரா
முகமது ஷமி
அர்ஷ்தீப் சிங்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ரிஷப் பந்த்
ரவீந்திர ஜடேஜா






