146 வருட டெஸ்ட் கிரிக்கெட்.. யாரும் செய்யாத சாதனை.. வெறும் 24 ரன்னில் பாகிஸ்தான் வீரர் ஷகீல் அசத்தல் ரெக்கார்ட்!

0
11803
Saud

ஆஸ்திரேலியா தனது கோடைக்காலத்தில் தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி வேகத்திற்கு புகழ்பெற்ற பெர்த் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வந்தது. வழக்கம்போல் ஆஸ்திரேலியா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என தனது முத்திரையை பதித்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா டேவிட் வார்னர் 164 ரன்கள் எடுக்க முதல் இன்னிங்ஸில் 487 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக் அரை சதம் அடிக்க 271 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து ஆஸ்திரேலியா 255 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

450 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி வெறும் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 360 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்தது.

இந்த டெஸ்டில் பாகிஸ்தான் தரப்பில் சவுத் சகில் முதல் இன்னிங்ஸில் 28, இரண்டாவது இன்னிங்ஸில் 24 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேன் செய்யாத ஒரு அரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

அதாவது அறிமுகமானதிலிருந்து தொடர்ச்சியாக 15 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 20 ரன்களுக்கு மேல் தாண்டி எடுத்த பேட்ஸ்மேன் என்ற அபூர்வ சாதனையைப் படித்திருக்கிறார். மேலும் இவரே அறிமுகமானதிலிருந்து முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்கள் தாண்டி எடுத்த வீரர் என்கின்ற சாதனையையும், இந்த ஆண்டில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் செய்திருந்தார். தற்பொழுது இன்னொரு அபூர்வ டெஸ்ட் உலக சாதனையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

28 வயதான இவர் இதுவரை 15 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 77.25 சராசரி உடன் இரண்டு சதங்கள் மற்றும் ஆறு அரை சதங்கள் உட்பட, 927 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் அவர் அடித்த இரண்டு சதங்களில் ஒரு சதம் இரட்டை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி அடுத்து பாக்சிங் டே நாளில் அதாவது டிசம்பர் 26ஆம் தேதி தனது இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலியா அந்த இடத்திலேயே தொடரை வென்றாலும் ஆச்சரியமில்லை!