14 சீரிஸ் வெற்றி.. இந்திய அணி தொடரை கைப்பற்றியது.. ஆஸி தொடர்ந்து 3வது முறையாக இழந்தது!

0
11866
ICT

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி, இன்று பஞ்சாப் ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இன்று இரண்டு அணிகளிலும் நிறைய மாற்றங்கள் இருந்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் தங்கள் அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார். இந்த மைதானம் பெரியது என்பதோடு இங்கும் பனிப்பொழிவு இரண்டாவது கட்டத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 28 பந்தில் 37 ரன்கள், ருத்ராஜ் 28 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கடுத்து ஸ்ரேயாஸ் 8 ரன்கள், சூரியகுமார் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இந்த போட்டியில் கொஞ்சம் முன்கூட்டியே வந்தார் என்று மிகச் சிறப்பாக விளையாடி 29 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 46 ரன்கள் எடுத்தார். இன்றைய போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற்ற விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா 19 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் த்வார்சூஸ் மூன்று விக்கெட், பெகரென்டாப் மற்றும் தன்வீர் சங்கா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்காட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 16 பந்தில் 31 ரன் எடுத்து அதிரடி துவக்கம் தந்தார். மேக் டெர்மட் 19, டிம் டேவிட் 19, மேத்யூ வேட் 36 என சிலர் மட்டுமே ரன் பங்களிப்பு தர, ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் 4 ஓவர்கள் பந்துவீசி 16 ரன்கள் மட்டும் விட்டு தந்து மூன்று விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது மூன்றாவது வெற்றி பெற்றிருப்பதால் தொடரைக் கைப்பற்றி இருக்கிறது. கடைசிப் போட்டி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

மேலும் இது இந்தியா உள்நாட்டில் தொடர்ந்து கைப்பற்றும் 14வது டி20 தொடராகும். மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடர்ந்து கைப்பற்றும் மூன்றாவது டி20 தொடராகும்.