132ரன் 19ஓவர்.. இங்கிலாந்து 2வது தொடரையும் இழந்தது.. வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!

0
2051
WI

தற்போது இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

இதில் முதலில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று என வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் நடைபெற்ற நான்கு போட்டிகளில் இரண்டு அணிகளும் கலா இரண்டு போட்டிகளை வென்று தொடரை சமநிலையில் வைத்திருந்தன.

- Advertisement -

நேற்று தொடரை முடிவு செய்யும் இறுதி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி நடைபெற்றது. போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இங்கிலாந்து அணியில் பில் சால்ட் 38, லிவிங்ஸ்டன் 28, மொயின் அலி 23 என மூன்று பேர் மட்டுமே 20 ரன்கள் தாண்டினார்கள். 19.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 3, ரசல், அகேல் ஹுசைன் மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து சிறிய இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இன்டீஸ் அணிக்கும் விக்கெட் சரிவு உண்டானது. அந்த அணியின் பிரண்டன் கிங் 3, ஜான்சன் சார்லஸ் 27, நிக்கோலஸ் பூரன் 10, சாய் ஹோப் 43, ரூதர்போர்டு 30, ரோமன் பவல் 8, ரசல் 3, ஜேசன் ஹோல்டர் 4 ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வழியாக 19.2 ஓவரில் இலக்கை எட்டி, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 எனக் கைப்பற்றியது. ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை படுதோல்விக்கு பிறகு, மீண்டும் இரண்டு தொடர்களை வெஸ்ட் இன்டிஸில் இழந்து நாடு திரும்புகிறது.