119 ரன்.. 220 ஸ்ட்ரைக் ரேட்.. சிஎஸ்கே வீரர் அதிரடி சதம்.. அடுத்த அம்பதி ராயுடு.. SMAT-ல் ரகானே ருதுராஜும் அதிரடி!

0
1628
Senapati

இந்தியாவின் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஸ்டாக் அலி டிராபி அக்டோபர் 16ஆம் தேதி துவங்கி நவம்பர் 6ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது.

இந்த தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கு பெறுகின்றன. இந்த அணிகள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் லீக் சுற்றில் விளையாடி, அடுத்து கால்இறுதி சுற்றுக்கு முன்னேறி, அரைஇறுதி மற்றும் இறுதி போட்டி நடத்தப்படும்.

- Advertisement -

நேற்று தொடங்கிய இந்தத் தொடரில் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒரு பக்கம் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றாலும் கூட, உள்நாட்டு கிரிக்கெட் தொடர்தான் இந்திய கிரிக்கெட் வளர்க்கும் என்கின்ற காரணத்தினால் இந்தத் தொடர் தடை படாமல் துவங்கி நடைபெறுகிறது.

நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ரகானே மும்பை அணிக்காக அரியானா அணிக்கு எதிராக, மிகச் சிறப்பாக விளையாடி அதிரடியாக 43 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 76 ரன்கள் அடித்திருந்தார்.

மேலும் ஒரு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் மத்திய பிரதேஷ் அணிக்காக பெங்கால் அணிக்கு எதிராக அதிரடியாக 42 பந்துகளில் 80 ரன்கள் குவித்து இருந்தார். இவர்கள் விளையாடிய அணிகள் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த அந்த அணிக்காக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சேனாபதி அசாம் மாநிலத்திற்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்திருக்கிறார்.

ஒரிசா அணிக்காக மூன்றாவது இடத்தில் களமிறங்கிய அவர் 54 பந்துகளை எதிர் கொண்டு பத்து பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 119 ரன்கள் குவித்தார். ஒரிசா அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய அசாம் அணி 215 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தற்பொழுது கிரிக்கெட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் டி20 கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பிரான்சிசைஸ் அணிகளும் தங்களை வளர்த்துக் கொள்ள மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

இதனால் தனிப்பட்ட வீரர்களும் டி20 கிரிக்கெட்டுக்கு பெரிய முக்கியத்துவம் தருகிறார்கள். இந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தற்போதைய தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் அம்பதி ராயுடு இடத்திற்கு சேனாபதி மிகச் சரியான தேர்வாக இருப்பார் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்!