2024-25 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 38 அணிகள் பங்குபெறும் இந்தத் தொடரில், சி பிரிவில் தமிழகம் மற்றும் குஜராத் அணிகள் இடம்பெற்று மோதி வருகின்றன.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற தமிழ்நாடு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணி தனது முதல் இன்னிங்ஸில் 236 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.
குஜராத் அணிக்கு மனன் ஹின்ரைஜா 65, உமாங் குமார் 76 ரன்கள் எடுத்தார்கள். தமிழக அணியின் தரப்பில் வேகப்பந்துவீச்சாளர்கள் சந்திப் வாரியர் 4 விக்கெட்டும், எம்.முகமது ஐந்து விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினார்கள்.
குஜராத் அணியை விட முதல் இன்னிங்ஸில் லீடிங் பெறுவதை நோக்கி களம் இறங்கிய தமிழக அணிக்கு பெரிய அதிர்ச்சியை காத்திருந்தது. போட்டி ட்ராவில் முடிந்தால் கூட முதல் இன்னிங்ஸில் லீடிங் எடுக்கும் அணிக்கு புள்ளிகள் சேர்த்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அணி தனது முதல் முக்கிய எட்டு விக்கெட்டுகளை நாராயணன் ஜெகதீசன் வரை 119 ரன்களுக்கு இழந்துவிட்டது. இதனால் தமிழக அணி 150 ரன்களுக்குள் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அணிக்கு பந்துவீச்சில் கலக்கிய எம்.முகமது மற்றும் சந்திப் வாரியர் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். இந்த ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது.
அசத்தலாக விளையாடிய எம்.முகமது அதிரடியாக அரை சதம் அடித்து பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 85 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி பத்தாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.
மேலும் எம்.முகமது வெளியேறிய போது தமிழக அணியின் ஸ்கோர் 235. மேற்கொண்டு இரண்டு ரன்கள் எடுத்தால் மட்டுமே குஜராத்தை விட முதல் இன்னிங்சில் லீடிங் எடுக்க முடியும் என்ற நிலையில், தமிழக அணி மேற்கொண்டு 15 ரன்கள் சேர்த்து 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இறுதியாக சந்திப் வாரியர் 35 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் லீடிங் பெற்றது.
இதற்கு அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய குஜராத் அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 38 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் தனி ஆளாக 5 விக்கெட் மற்றும் 85 ரன்கள் எடுத்து எம் முகமது தமிழக அணியை காப்பாற்றி இருக்கிறார்!






