வெறும் 1164 பந்து.. சூரியகுமார் சூப்பர் உலக சாதனை.. தடுக்கவும் உடைக்கவும் ஆளே இல்லை!

0
1263
Surya

இந்திய தென் ஆப்பிரிக்க அணிகள், தற்பொழுது தென் ஆப்பிரிக்க மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் மோதி வருகின்றன.

முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டதால், இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு மட்டுமே, தொடரை வெல்லும் வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இன்று இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ருதுராஜ் நீக்கப்பட்டு கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

துவக்க வீரர்களாக வந்த ஜெயஸ்வால் மற்றும் கில் இருவருமே ரன் ஏதும் எடுக்காமல் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

இந்திய அணி பவர் பிளேவின் முடிவில் 59 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. திலக் வருமா 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

ஒரு முனையில் விக்கட்டுகள் இழந்தாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அதிரடியில் ஈடுபட்டார்கள். கேப்டன் சூரியகுமார் யாதவும் சூழ்நிலை பற்றி கவலைப்படாமல் வழக்கம்போல் விளையாட ஆரம்பித்தார்.

இன்றைய போட்டியில் அவர் தனது 56வது சர்வதேச டி20 இன்னிங்சில் 2000 ரன்களை கடந்தார். முதல் இடத்தில் 52 இன்னிங்ஸில் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரும் இருக்கிறார்கள். இதற்கு அடுத்து சூரியகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி வருகிறார்கள்.

மேலும் இந்தப் போட்டியில் சூரியகுமார் யாதவ் 2000 ரன்களை கடந்ததின் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்தவர் என்கின்ற அரிய உலக சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு சூரியகுமார் 1164 பந்துகள் எடுத்திருக்கிறார்.

இந்திய தரப்பில் கேஎல்.ராகுலுக்கு 1415 பந்துகள், விராட் கோலிக்கு 1467 பந்துகள் தேவைப்பட்டு இருக்கிறது. குறைந்த இன்னிங்சில் 2000 ரன்களை கடந்த பாபர் அசாமுக்கு 1544 பந்துகள், முகமது ரிஸ்வானுக்கு 1566 பந்துகள் தேவைப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

1164 பந்துகள் சூரியகுமார் யாதவ்
1283 பந்துகள் ஆரோன் பின்ச்
1304 பந்துகள் மேக்ஸ்வெல்
1398 பந்துகள் டேவிட் மில்லர்
1415 பந்துகள் கேஎல்.ராகுல்