இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டி மிகவும் திருப்பங்கள் நிறைந்த ஒன்றாக அமைந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி 117, ஸ்ரேயாஸ் ஐயர் 105, கில் 80 ரன்கள் எடுக்க, நான்கு விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் இந்தியா அணி குவித்தது.
இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த நியூசிலாந்தின் கேப்டன் வில்லியம்சன் மற்றும் மிட்சல் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை நொறுக்கி தள்ளி ரன்கள் சேர்த்த ஆரம்பித்தார்கள்.
ஒரு கட்டத்தில் இந்த ஜோடி எளிமையாக ஆட்டத்தை வெல்ல வைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் முகமது சமி கேன் வில்லியம்சனுக்கு ஒரு எளிய கேட்ச் வாய்ப்பை பும்ரா பந்துவீச்சில் தவறவிட்டார். இதனால் ஆட்டத்தில் நெருக்கடி திடீரென உருவானது.
இந்த நிலையில் மீண்டும் பந்துவீச்சுக்கு வந்த முகமது சமி கேன் வில்லியம்சன் விக்கெட்டை சூரியகுமார் யாதவ் மூலம் கைப்பற்றி அசத்தினார். மேலும் அதே ஓவரில் முகமது சமி டாம் லாதம் விக்கெட்டை எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தினார்.
இதற்கு முன்பாக நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரது விக்கெட்டையும் முகமது சமியே கைப்பற்றி இருந்தார். மேலும் தன்னுடைய கடைசி ஸ்பெல்லுக்கு வந்த முகமது சமி அச்சுறுத்திக் கொண்டிருந்த டேரில் மிட்சல் விக்கட்டையும் கைப்பற்றினார். அடுத்து டிம் சவுதி மற்றும் பெர்குஷன் விக்கெட்டையும் கைப்பற்றி மொத்தம் ஏழு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
இதன் மூலம் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மூன்று முறை ஐந்து விக்கெட் மேல் கைப்பற்றி இருக்கிறார். மேலும் ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பையில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றி, குறைந்த இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட் கைப்பற்றியவர் என்கின்ற சாதனையை படைத்தார்.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் குறைந்த இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் :
முகமது சமி 17 இன்னிங்ஸ்
மிட்சல் ஸ்டார்க் 19 இன்னிங்ஸ்
லசீத் மலிங்கா 25 இன்னிங்ஸ்
ட்ரெண்ட் போல்ட் 28 இன்னிங்ஸ்
கிளன் மெக்ராத் 30 இன்னிங்ஸ்
முத்தையா முரளிதரன் 30 இன்னிங்ஸ்
வாசிம் அக்ரம் 33 இன்னிங்ஸ்
இன்று ஒரே போட்டியில் முகமது சமி மொத்தம் 10 சாதனைகள் படைத்திருக்கிறார். அதன் விபரங்களை கீழே பார்ப்போம்.
இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சு 7/57.
அதிவேகமாக ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பையில் 50 விக்கெட்.
ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் அதிகபட்சமாக நான்கு முறை ஐந்து விக்கெட் கைப்பற்றியது.
ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சு 7/57.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஒரே இந்தியாவுக்காக அதிக விக்கெட் 23.
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அதிகபட்சமாக மூன்று முறை ஐந்து விக்கெட் கைப்பற்றியது.
நடப்பு உலகக் கோப்பையில் அதிகபட்சமாக மூன்று முறை ஆட்டநாயகன் விருது பெற்றது.
ஐசிசி நாக் அவுட்போட்டியில் ஐந்து விக்கெட் மேல் கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர்.
ஒரு ஆண்டில் அதிகமுறையாக ஐந்தாவது முறை ஆட்டநாயகன் விருது ஒருநாள் கிரிக்கெட்டில் வாங்கியுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அதிகபட்சமாக நான்கு முறை ஆட்டநாயகன் விருது வாங்கிய இந்திய வீரர்.