அணிக்குள் வந்த 6வது நாளில் கையில் உலகக் கோப்பை.. கடவுள் நல்லது செய்ய அனுப்பி வைத்தார் – செபாலி வர்மா பேட்டி

0
148
Shafali

நேற்று பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக ஆட்டநாயகி விருது வென்ற செபாலி வர்மா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இந்திய பெண்கள் அணியின் துவக்க வீராங்கனை பிரதிகா ராவல் காயமடைந்ததால், செபாலி வர்மா அரையிறுதி போட்டிக்கு அழைக்கப்பட்டார். நேற்று இறுதிப்போட்டியில் 87 ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட் கைப்பற்றி பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை வென்றார். இந்திய அணிக்குள் வந்த ஆறாவது நாளில் அவரது கையில் உலக கோப்பை வந்துவிட்டது.

- Advertisement -

கடவுள் அனுப்பி வைத்தார்

இதுகுறித்து செபாலி வர்மா பேசும் பொழுது ” கடவுள் என்னை ஏதோ நல்லது செய்ய அனுப்பியிருக்கிறார் என்று நான் ஆரம்பத்தில் சொன்னேன். இப்பொழுது அதுதான் இங்கு பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. உலகக் கோப்பையை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அணிக்கு நீண்ட காலம் கழித்து அழைக்கப்பட்ட பிறகு சிறப்பாக விளையாடுவது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து அமைதியாக இருந்தால் என்னால் முடியும். நான் அதைத்தான் செய்தேன்”

“எனது பெற்றோர் சகோதரர் மற்றும் நண்பர்கள் என எல்லோரும் எனக்கு ஆதரவு கொடுத்தார்கள். அவர்கள் எப்படி நான் விளையாட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். இந்த போட்டி மொத்த அணிக்கும் முக்கியமானது எனவே இதில் எப்படி ரன்கள் எடுப்பது என்று தான் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். இன்று என்னுடைய மனம் தெளிவாக இருந்தது நான் என் திட்டங்களை மிக சரியாக செயல்படுத்தினேன்”

- Advertisement -

அணியில் கிடைத்த ஆதரவு

“பேட்டிங் செய்தபோது மந்தனா தீதி என்னுடன் பேசிக்கொண்டே இருந்தார். மேலும் ஹர்மன் தீதி எனக்கு பெரிய ஆதரவை கொடுத்திருந்தால். மேலும் என்னை அணிக்குள் வரவேற்று எல்லோருமே பெரிய ஆதரவை கொடுத்தார்கள். என்னுடைய இதயத்தை திறந்து என்னுடைய ஆட்டத்தை விளையாடச் சொன்னார்கள். இவ்வளவு ஆதரவு கிடைக்கும் பொழுது நாம் சிறப்பாக செயல்படுவோம்”

இதையும் படிங்க : உங்க வெற்றி அந்த பெரிய விஷயத்துக்கானது.. இத மட்டும் செய்யாமல் விட்றாதீங்க.. நாடே பெருமைப்படுது – விராட் கோலி வாழ்த்து

“நான் விளையாடும் போது பால்கனியில் சச்சின் சார் எங்களை பார்த்துக் கொண்டிருந்தார். இது என்னால் மறக்க முடியாத விஷயம். அவர் எனக்கு தொடர்ந்து பெரிய நம்பிக்கையை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். நான் அவருடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். இது எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -