“அடிப்பாங்கன்னு தெரியும்.. ஆனா இப்படி அடிப்பாங்கனு நினைக்கல!” – இலங்கை கேப்டன் தடுமாற்ற பேச்சு!

0
1438
Shanaka

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் டெல்லி மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ரசிகர்களுக்கு மிகவும் விருந்தான போட்டியாக அமைந்தது!

இந்த போட்டியில் இலங்கை முதலில் டாஸ் வெற்றி பெற்று பந்து வீசுவது என தீர்மானித்தது. களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் குயிண்டன் டிகாக் வாண்டர் டேசன் மற்றும் மார்க்ரம் மூவரும் அதிரடியாக சதம் அடித்து அசத்தினார்கள். தென் ஆப்பிரிக்கா ஐந்து விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்து 102 ரன்கள் வித்தியாசத்தில் உலகக்கோப்பை முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு இது துவக்க போட்டியில் சிறப்பான வெற்றியாக அமைந்தது.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் சொந்த நாட்டில் இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 50 ரன்கள் ஆல்அவுட் ஆன இலங்கை அணி அதிலிருந்து மீண்டு வருவதற்கான போட்டியாக இது அமைந்திருக்கலாம். குசால் மெண்டிஸ் பேட்டிங்கில் இலங்கை அணிக்கு மிக நம்பிக்கையாக காட்சியளித்தார்.

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய இலங்கை அணியின் கேப்டன் டசன் சனகா “நான் அதிக ஸ்கோர் அடிக்கப்படும் என்று எதிர்பார்த்தேன். தென் ஆப்பிரிக்க அணியில் மூன்று பேர் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்கள். நாங்கள் வழக்கமான லென்த்தை தவறவிட்டோம்.மீண்டும் விளையாடும்போது அதை நாங்கள் மாற்ற வேண்டும்.

- Advertisement -

நாங்கள் அவர்களை 350 முதல் 370 ரன்களுக்குள் வைப்போம் என்று நினைப்போம். அசலங்கா மற்றும் மெண்டிஸ் இருக்கும் பேட்டிங் ஃபார்ம் மூலம் அதை சமாளிக்கலாம் என்று கருதினோம்.

ஆனால் நாங்கள் நினைத்தபடி நடக்கவில்லை. கூடுதல் ரன்களை கொடுத்து விட்டோம். கூடுதல் ரன்களை எங்களால் சமாளிக்க முடியாமல் போய்விட்டது. நான் பாசிடிவ் இன்டெண்ட் உடன் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுக்குப் பந்துவீச்சில் முதல் 10 ஓவர்கள் சிறப்பாக இருந்தது. அடுத்த ஆட்டத்திற்கு இன்னும் கூர்மை படுத்த வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!