நாளை இந்தியா ஆஸி போட்டியில் மழை வாய்ப்பு.. மைதானம் மற்றும் ஆடுகளம் புள்ளி விபரங்கள்.. முழு தகவல்கள்

0
451
Rohit

ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் செயின்ட் லூசியா டேரன் சமி மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இப்போட்டிக்கான மைதானத்தின் புள்ளி விபரங்கள், ஆடுகளத்தின் தன்மை மற்றும் வானிலை அறிக்கை ஆகியவற்றை பார்க்கலாம்.

நாளைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்றால் மட்டுமே அரையிறுதிக்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. ஒருவேளை தோல்வி அடைந்தால், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

- Advertisement -

இதேபோல் இந்திய அணி நாளைய போட்டியில் 40 ரன்கள் வித்தியாசம் அல்லது 36 பந்துகள் மீதம் இருக்கும் போது தோல்வி அடையக் கூடாது. இப்படி ஏதாவது நடந்தால், ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தால், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி அடைய இந்திய அணி வெளியேறிவிடும். எனவே போட்டிக்கான முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

இந்த மைதானத்தின் ஆடுகளத்தை பொறுத்தவரையில் மற்ற வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களை விட பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளம். எனவே பந்து வீச்சுக்கு சரியான திட்டங்கள் இங்க வேண்டும். நடப்பு டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 218 ரன்கள் அடித்திருக்கிறது. குறைந்தபட்சமாக நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை 118 ரன்கள் எடுத்திருக்கிறது.

மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பையில் மொத்தம் இங்கு ஐந்து போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி மூன்று முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி இரண்டு முறையும் வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 343 ரன்.. கோலி ரோகித் சாதனையை தவறவிட்ட மந்தனா.. ஆனா வேற ஒரு மாஸ் ரெக்கார்ட்.. தெ.ஆ வொயிட் வாஷ்

வானிலையை பொறுத்தவரையில் வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி நாளை காலை 8 மணிக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், அதே சமயத்தில் வானம் தெளிவாக வெயிலுடன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் போட்டி தொடங்கும் காலை 10:30 மணிக்கு மழை நின்று வானம் தெளிவாக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே நாளை இரண்டு பெரிய அணிகள் மோதிக்கொள்ளும் முக்கியமான போட்டி முழுமையாக நடைபெறும் என்கின்ற மகிழ்ச்சியான செய்தி ரசிகர்களுக்கு கிடைக்கிறது!