கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..  கோலி, ரோகித் முடிவு குறித்து அஸ்வின் கருத்து

0
15

2025 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஒரு ஏமாற்றமான ஆண்டாகவே அமைந்திருக்கிறது. பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், அந்த தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு அறிவித்தார்.

இதன் பிறகு இங்கிலாந்து தொடருக்கு ரெடியாவதற்கு முன்பாகவே ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், விராட் கோலியும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.இது குறித்து தற்போது தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது youtube சேனலில் பேசி இருக்கிறார். அதில் நான் ஆஸ்திரேலியாவில் எனது ஓய்வு முடிவை அறிவித்தேன்.

- Advertisement -

ரோகித்துக்கு காயம் ஏற்பட்டது:

ஆனால் இந்த இரண்டு வீரர்களும் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ரோகித் சர்மாவால் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாட முடியுமா என்று கேட்கிறீர்கள்? நிச்சயமாக அவரால் முடிந்திருக்கும். ரோகித் சர்மா நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிஇருக்க வேண்டும்.

ஆனால் காயம் காரணமாக அவருக்கு அந்த வாய்ப்பு பறிபோனது. அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகி இருந்தால் இந்நேரம் கூடுதலாக 30, 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருப்பார். ஆனால் விராட் கோலியின் இந்த ஓய்வு முடிவு என் மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது.

- Advertisement -

கோலிக்கு என்ன ஆச்சு?:

ஒருவேளை அவருடைய ஒட்டுமொத்த கிரிக்கட்டுமே ஒரு அல்லது இரண்டு ஆண்டுகள் தான் எஞ்சி இருக்கிறதா? இல்லை அவருடைய உடல் சக்தி ஒரு காரணமா? இல்லை மனதளவில் விராட் கோலி பலத்தை இழந்து விட்டாரா? நெருக்கடி எல்லாம் தாங்கக்கூடிய பக்குவம் அவருக்கு போய்விட்டதா ஆனால் உடல் அளவில் பில்டிங் செய்யும்போது கூட அவர் அதை எனர்ஜியை வெளிக்காட்டி கொண்டு தான் இருந்தார்.

இதையும் படிங்க: 2025 WTC பைனலுக்கு.. அதிரடி தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.. முதல் முறை வரலாறு மாறுமா?

ஆனால் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பு இந்தியா இழந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -