இன்னும் 194 ரன்கள்.. முதல் வீரராக ஜெய்ஸ்வாலுக்கு கோல்டன் வாய்ப்பு.. 2வது டெஸ்டில் சாதிப்பாரா?

0
676
Jaiswal

இந்திய அணியின் இளம் தொடக்க நம்பிக்கை நட்சத்திரம் ஜெய்ஸ்வால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் வீரராக மெகா சாதனை ஒன்றை படைப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மற்ற பெரிய பேட்ஸ்மேன் ஏமாற்றிய நிலையில் மிகப்பெரிய விளையாடி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். ஆனால் அதை சதமாக மாற்றும் நிலையில் தோல்வி அடைந்து விட்டார். எனவே இரண்டாவது இன்னிங்ஸில் நிச்சயம் அவரிடமிருந்து பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

கவாஸ்கருக்கு அடுத்து ஜெய்ஸ்வால்

ஒரு டெஸ்ட் தொடரில் 700 க்கும் மேற்பட்ட பெண்களை இரண்டு முறை கவாஸ்கர் இந்திய வீரராக எடுத்திருக்கிறார். கவாஸ்கருக்கு பிறகு இதை செய்த ஒரே இந்திய பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் மட்டுமே இருக்கிறார். அவர் இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்தார்.

அதே சமயத்தில் அவருக்கு அதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்க மண்ணில் விளையாடிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் கடினமாக அமைந்திருந்தது. அந்த டெஸ்ட் தொடருக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆடுகளமும் விளையாடுவதற்கு மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2024 ஆம் ஆண்டின் முதல் வீரர்

ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு மொத்தம் ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 806 ரன்கள் எடுத்திருக்கிறார. மேலும் அவர் 194 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் இந்த ஆண்டின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரராக சாதனை படைப்பார். ஆனால் இதற்கு மிக நெருக்கத்தில் ஜோ ரூட் இருப்பதால் ஜெய்ஸ்வால் அடுத்த போட்டியிலேயே செய்ய வேண்டியது முக்கியமாகும்.

இதையும் படிங்க : பங்களாதேஷ் கான்பூர் டெஸ்ட்.. அஸ்வின் சாதிக்க இருக்கும் 6 மெகா சாதனைகள்.. குவிய போகும் ரெக்கார்டுகள்

2024 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர்கள் :

ஜோ ரூட் – 986 ரன் – 11 டெஸ்ட்
ஜெய்ஸ்வால் – 806 ரன் – 7 டெஸ்ட்
குசால் மெண்டிஸ் – 761 ரன் – 6 டெஸ்ட்
ஒல்லி போப் – 745 ரன் – 11 டெஸ்ட்
பென் டக்கெட் – 707 ரன் – 11 டெஸ்ட்

- Advertisement -