மேக்ஸ் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் இந்திய அணி நிர்வாகம் அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்று இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் சாடியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் ஓபனர்களாக களம் இறங்கி வரும் நிலையில், திறமையான இளம் வீரர் சூர்யவன்ஷி பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்.
இது குறித்து முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் பேசும்போது “இந்தியா சூர்யவன்ஷியை முற்றிலும் பாழாக்கிவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் போன்ற ஒரு சாதாரண அணிக்கு எதிராக அவருக்கு 3 மேட்ச்களில் வாய்ப்பு அளித்திருக்கலாம். தற்போது அபிஷேக் சர்மாவை நீண்ட காலமாக பார்த்துவிட்டதால், அவருக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு அடுத்த மேட்ச்சில் சூர்யவன்ஷி மற்றும் சாம்சன் ஓபனிங் செய்ய வைக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் சஞ்சு சாம்சன் குறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “சாம்சனின் ஃபார்ம் எப்போதும் ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது. அவரது கன்சிஸ்டன்சி எப்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது. அவர் திடீரென உலகக்கோப்பை போன்ற தொடர்களில் அற்புதம் செய்வார், பின்னர் திடீரென தொடர்ந்து பெயிலியர் ஆவார். ஆனால் அபிஷேக் சர்மாவுக்கு இதுபோல மோசமான நிலைமை வருவதில்லை. இப்போது மீண்டும் அடுத்த மேட்ச்சில் சாம்சன் ரன் அடிப்பார்” என்று கூறி இருக்கிறார்.






