‘ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்’ கடைசியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் இந்தியாவை காப்பாற்றிய பங்களாதேஷ்!

0
1153

சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியுள்ளது பங்களாதேஷ்.

உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகிறது. குரூப் இரண்டில் இடம் பெற்றுள்ள ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதியை போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.

- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கு துவக்க வீரர் சான்டோ 55 பந்துகளில் 71 ரன்கள் அடித்து மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தார். இவருக்கு பக்கபலமாக கேப்டன் சாகிப் அல் ஹசன் 23 ரன்களும் அபீப் ஹுசைன் 29 ரன்களும் அடித்திருந்தனர்.

நரவா மற்றும் முசரபானி இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்திருந்தது.

151 ரன்கள் அடித்தால் வெற்றி பெற்று 5 புள்ளிகளுடன் குரூப் இரண்டின் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கலாம் என்ற முனைப்புடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு சிறப்பான துவக்கம் அமையவில்லை.

- Advertisement -

பவர் பிளேயில் வெறும் 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு ஜிம்பாப்வே அணி தள்ளப்பட்டது. சகபவா 15 ரன்களுக்கு அவுட் ஆனார். 69/5 இல் இருந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த வில்லியம்ஸ் மற்றும் ரியான் பர்ல் இருவரும் அணியை சரிவிலிருந்து இருந்து மீட்டனர்.

சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்த வில்லியம்ஸ் 19ஆவது ஓவரில் தவறான முடிவு எடுத்து ரன் அவுட் ஆகினார். இவர் 42 பந்துகளில் 64 ரன்கள் அடித்து தவறான நேரத்தில் ஆட்டம் இழந்தார்.

இருபதாவது ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டபோது பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் அடித்து மீண்டும் ஆட்டத்தை தன் பக்கம் திரும்பியது ஜிம்பாப்வே, கடைசி இரண்டு பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. இரண்டு பந்தையும் அடிக்க முடியாமல் ஸ்டம்ப் அவுட் ஆனது இதனால் வங்கதேச வீரர்கள் துள்ளிக்குதித்து வெற்றியை கொண்டாடினர்.

கடைசி நேரத்தில் பந்தை ஸ்டம்பிற்கு முன்வந்து வங்கதேச கீப்பர் பிடித்ததால் கடைசி பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. மீண்டும் ஒரு வாய்ப்பு ஜிம்பாப்வே அணிக்கு கிடைத்தது. துரதிஷ்டவசமாக அதையும் அடிக்க முடியாமல் போனதால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே அணி இப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் ஐந்து புள்ளிகளுடன் குரூப்பின் புள்ளி பட்டியலில் தற்காலிகமாக முதலிடம் பிடித்திருக்கலாம். தற்போது நான்கு புள்ளிகள் உடன் வங்கதேச அணி புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.