2 விக்கெட் 12 ரன்.. திரில் போட்டி.. பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாப்வே அணி.. அட்டகாச ஆறுதல் வெற்றி

0
479
Zimbabwe

தங்களது சொந்த நாட்டில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டியில் ஜிம்பாவே அணி பாகிஸ்தான் அணியை பரபரப்பான போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 2-1 எனக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று பாகிஸ்தான அணி தொடரை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டியை ஜிம்பாப்வே அணி வென்று ஆறுதல் வெற்றி அடைந்திருக்கிறது.

- Advertisement -

சிறப்பாக கட்டுப்படுத்திய ஜிம்பாப்வே

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஃபர்கான் 4, ஓமர் யூசுப் 0 ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து வந்த உஸ்மான் கான் 2 ரன்னில் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் சல்மான் அலி ஆகா 32, தையப் தாகிப் 21, காசிம் அக்ரம் 20, அராபத் மின்ஹாஸ் 22, அப்பாஸ் அப்ரிடி 15 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே பந்துவீச்சில் முசரபாணி 2 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

கடைசி ஓவர் திரில் போட்டி

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஜிம்பாப்வே அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இன்னும் ஒரு துவக்க ஆட்டக்காரர் மருமாணி அதிரடியாக 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். கேப்டன் சிக்கந்தர் ராசா 19 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : 3 வீரர்களை விளாசிய பேட் கம்மின்ஸ்.. கில்கிறிஸ்டுக்கும் அதிரடி பதில்.. நடந்தது என்ன? – முழு தகவல்கள்

இதைத் தொடர்ந்து அந்த அணிக்கு இறுதி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் மூன்று விக்கெட்டுகள் மட்டும் இருந்தது. இந்த நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் மற்றும் இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்து ஒரு பந்து மீதம் வைத்து ஒரு விக்கெட்டை இழந்து இலக்கை எட்டி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாகவும் அமைந்தது

- Advertisement -