கிரிக்கெட்

ஜாகீர் கானின் 15 பேர் கொண்ட இந்தியாவின் டி20 உலகக்கோப்பை அணி – தவானுக்கு இடமில்லை

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் இந்திய அணியின் பந்துவீச்சு ஆலோசகருமான ஜகீர் கான் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான தன்னுடைய உத்தேசமான இந்திய அணியை வெளியிட்டுள்ளார். இந்த அணியில் ஆல்ரவுண்டர் குர்ணால் பாண்டியா, சைனா மேன் குல்தீப் யாதவ், ஷிகர் தவன் ஆகியோரை அவர் நீக்கியுள்ளார். ஐசிசி நடத்தும் தொடர்களில் நாயகனான ஷிகர் தவானுக்கும் அணியில் இடமில்லை இதுவரை நடந்துள்ள ஐசிசி தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டாப் ஸ்கோர் ஆஃ தே டோர்ணமெண்ட் அவருக்கே அணியில் இடமில்லை பல ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

- Advertisement -

கிரிக்பஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜாகிர் கான் தனது உலகக் கோப்பைக்கான உத்தேச அணியை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில் தற்போது நடந்துள்ள தொடரில் இஷான் கிஷன் , தீபக் சஹர் ஆகியோர் சிறப்பாக விளையாடி உள்ளனர். இவர்கள் நிச்சயம் அணியில் இருப்பார்கள்.

எனது அணியை பொறுத்தவரை ரோஹித் சர்மாவும் கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். அவர்களைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார். விராட் கோலி உலக கோப்பை அணியில் தொடக்க வீரராக களம் இறங்க விரும்புவது எனக்கு தெரியும் இருந்தும் நான் அவரை தொடக்க வீரராக களம் இறக்கவில்லை. ஒருவேளை ஹர்டிக் பாண்டியா ஆல்-ரவுண்டராக இல்லாமல் பேட்ஸ்மேனாக மட்டும் இருக்கும் பட்சத்தில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கலாம்.

மேலும் ஹர்டிக் பாண்டியாவை பேட்ஸ்மேனாக மட்டும் கணக்கில் கொண்டு அணியில் சேர்க்கும் நிலை வருமெனில் அவருக்கு பதில் முழுநேர பந்து வீச்சாளரை அணியில் சேர்க்கலாம். பேட்ஸ்மேன்களை பொருத்தவரையிலும் இந்த அணியில் சூர்யகுமார் யாதவ் சூழ்நிலைக்கேற்ப ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் பினிஷர்களாக இருப்பார்கள்.

- Advertisement -

டி20 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் லெக் ஸ்பின் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்பின்னர்களைப் பொறுத்த வரை நான் சஹலுக்கு முன்னுரிமை கொடுப்பேன். அவருக்கு பேக்கப்பாக ராகுல் சாஹர் இருப்பார். பவர் பிளேயில் பந்து வீசக்கூடிய ஸ்பின்னர்கள் வேண்டுமெனில் வாஷிங்டன் சுந்தர் / வருன் சக்ரவர்த்தி இருவரில் ஒருவரை தேர்வு செய்யலாம். மிஸ்ட்ரி பந்துவீச்சாளர் வேண்டுமென்றால் கண்ணை மூடிக்கொண்டு வருண் சக்ரவர்த்தியை தேர்வு செய்யலாம் இல்லை எக்ஸ்ட்ரா ஒரு பேட்ஸ்மேனுடன் விளையாட வேண்டும் என்றால் தாராளமாக வாஷிங்டன் சுந்தரருடன் செல்லலாம்.

நடராஜனின் உடற் தகுதியை பொறுத்து அவர் அணியில் தேர்வு செய்யப்படுவார்.இறுதிக்கட்ட ஓவர்களில் அவரைப் போன்று இடது கை பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் பலமானதாக இருக்கும்.அவரைத் தொடர்ந்து பும்ரா, முகமது சமி ஆகியோர் அணியில் இருப்பார்கள்.

ஜகீர் கானின் 15 பேர் கொண்ட உத்தேச அணி:

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ரிஷாப் பண்ட்த (கீப்பர்), ஹர்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, டி நடராஜன் / புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர் / வருண் சக்ரவர்த்தி