ஓடி வந்து சறுக்கி விழுந்து கொண்டாடுவதற்கு இதுதான் காரணம் – சாஹல் பேட்டி

0
107
Yuzvendra Chahal Sliding Celebration

நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2022ஆம் ஆண்டு டாட்டா ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக சஹால் ஜொலித்து வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தற்போது விளையாடி வரும் அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் அந்த அணிக்கு ஏகப்பட்ட முறை திருப்புமுனை கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 4 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் (ஃபைபர் அல்லது 5 விக்கெட் ஹால் ) கைப்பற்றி அசத்தினார். குறிப்பாக ஒரு ஓவரில் எந்தவித ரன்னும் கொடுக்காமல்(மெய்டன் ஓவர்)ஹாட்ரிக் விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அந்த போட்டியில் சஹால் ஃபைபர் எடுத்த மாத்திரத்தில் சந்தோஷத்தில் திடீரென மைதானத்தின் சறுக்கிக் கொண்டே கீழே படுத்தவாறு ஒரு போஸ் கொடுத்தார். அவர் அவ்வாறு கொண்டாடிய விதம் மிகவும் வித்தியாசமாகவும், ஆச்சரியமாக இருந்தது. அவ்வாறு கொண்டாடிய காரணம் என்ன என்பதை தற்போது அவரே விளக்கிக் கூறியுள்ளார்.

நான் அப்பொழுதே இதை என் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்

2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் ஒரு சில போட்டிகளில் நான் அணியில் இடம்பெறவில்லை. நான் ஒரு சில போட்டிகளில் பெஞ்சில் அமர்த்தப்பட்டேன். அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத நேரத்தில், ஒருமுறை நான் களத்திற்கு வெளியே கீழே படுத்து கொண்டிருந்தேன்.

அவ்வாறு நான் படுத்துக் கொண்டிருந்த புகைப்படம் சமூக வளைதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. அந்த சமயத்தில் அது அந்த அளவுக்கு வைரலாகும் என்று நான் நினைக்கவில்லை. இன்னும் ஒரு படி மேலே போய் அந்த புகைப்படத்தை பயன்படுத்தியவாறு நிறைய மீம்ஸ்களும் வந்த வண்ணம் இருந்தன.

- Advertisement -

அவ்வாறு மீம்ஸ்கள் வந்தது நல்ல விஷயம்தான்.அது எனக்கு மிகவும் விசேஷமான ஒன்றாக அமைந்தது. நான் அப்பொழுது என் மனதிற்குள் ஒன்றை நினைத்துக்கொண்டேன். இனி நான் எப்பொழுதெல்லாம் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை (ஃபைபர்) கைப்பற்றுகிறேனோ, அப்பொழுதெல்லாம் படுத்துக் கொண்டு அவ்வாறு போஸ் கொடுக்க வேண்டும் என்று முடிவும் செய்தேன்.

நான் முடிவெடுத்தபடியே கொல்கத்தா அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பின்னர் நான் அவ்வாறு படுத்து கொண்டவாறு போஸ் கொடுத்து என்னுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினேன் என்று சஹால் விளக்கிக் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை கைப்பற்ற, தன்னால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து வழங்கத் தயாராக இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.