இந்திய அணியில் பெண் ஒருவருடன் சுற்றும் சாஹல்.. ரசிகர்கள் குழப்பம்

0
310

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி நேற்று இந்தூருக்கு சென்றது. விமானத்தில் இந்திய அணி ஜெர்ஸியை அணிந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டு சாகல் இவரோடு தான் நான் எப்போதும் பயணம் செய்வேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் பெண் யாரும் இல்லையே. இந்த நிலையில் இவர் எப்படி ஒரு பெண்ணுடன் பயணம் செய்கிறார் என்று ரசிகர்களும் குழப்பம் அடைந்தனர்.

அந்தப் பெண்ணும் இந்திய அணி ஜெர்சி அணிந்தது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.  இதனை அடுத்து தான் சாகல், தனது குறும்புத்தனத்தை செய்திருப்பது தெரிய வந்தது. அதாவது ஆணின் புகைப்படத்தை பெண்ணாக மாற்றும் ஒரு ஆப்பை வைத்து குல்தீப் யாதவின் புகைப்படத்தை சாகல் பெண்ணாக மாற்றி தனது ட்ராவல் பார்ட்னர் என்று பதிவிட்டுள்ளது பிறகு தெரியவந்துள்ளது.

இந்த உண்மை தெரிந்ததும் ரசிகர்கள் சிரிப்பலையில் ஆழ்ந்தனர். பலரும் குல்திப் யாதவ் பெண் வேடத்தில் அழகாக இருப்பதாகவும் பாராட்டினர். மேலும் சிலர் இந்த புகைப்படத்தை பார்த்து சாகலின் மனைவி செம கடுப்பாகி இருப்பார் என்றும் பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சாகல் தற்போது காயம் காரணமாக கடைசியாக விளையாடிய 3 ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் இடம் பெறவில்லை. மேலும் அவருடைய இடத்தில் குல்திப்  சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் காரணமாக சாகல் மீண்டும் அணிக்கு வருவாரா என்று தெரியவில்லை.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி ஏற்கனவே வென்ற நிலையில் கடைசி ஒரு நாள் போட்டியில் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அணியை விட்டு விலகி ரஞ்சிப் போட்டியில் பங்கேற்பார்கள் என்ற தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து பிசிசிஐ இன்னும் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.