விண்வெளியில் பறந்த யுவராஜ் சிங்கின் பேட் – என்.எப்.டி தொழில்நுட்பம் மூலம் செயல்படுத்திய நிறுவனம்

0
177
Yuvraj Bat to Fly into Space

இந்திய அணி இந்த நூற்றாண்டில் வென்ற மூன்று முக்கிய உலக கோப்பைகளில் இரண்டு உலகக் கோப்பையை வெல்ல காரணமான முக்கிய வீரர் இந்திய அணியின் யுவராஜ் சிங். 2007 டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 30 பந்துகளை மட்டுமே சந்தித்து 70 ரன்களை விளாசி இந்திய அணியை இறுதிப்போட்டிக்குள் அழைத்துச் சென்றார். அதேபோல லீக் சுற்றில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் ஒரே ஓவரில் அடித்து டி20 போட்டிகளின் அருமையை ரசிகர்களுக்கு எடுத்துரைத்தார். இதோடு இல்லாமல் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் முக்கியமான காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரைசதம் அடித்தார். தேவையான நேரத்தில் முக்கியமான விக்கெட்டுகளையும் பெற்றுத்தந்தது இவரது பௌலிங். இதன் காரணமாக அந்தத் தொடரின் தொடர் நாயகனாக யுவராஜ் சிங் அறிவிக்கப்பட்டார்.

2011 உலக கோப்பை தொடருக்கு பின்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் இவரது பேட்டிங்கும் மிகவும் பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்தாலும் முன்புபோல அணிக்கு பங்களிக்க முடியாத காரணத்தினால் அணியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். தற்போது யுவராஜ் சிங் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை அடிக்க பயன்படுத்திய பேட்டை NFT டெக்னாலஜி மூலமாக பூமியின் சுற்றுப் பாதைக்கு கொண்டு சென்றது கொலக்ஷன் நிறுவனம். கடந்த 2003ஆம் ஆண்டு வங்கதேசத்தில் உள்ளதாக மைதானத்தில் தன்னுடைய முதல் சதத்தை இந்த பேட்டை பயன்படுத்திதான் அடித்திருந்தார் யுவராஜ்.

- Advertisement -

ஏர் பலூன் மூலமாக பூமியில் இருந்து யுவராஜ் சிங்கின் கையெழுத்திட பேட்டும் அவரது முப்பரிமாண சிலையும் மெட்டாவெர்ஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக தன்னுடைய ரசிகர்களிடம் இன்னமும் நெருக்கமாக பயணிக்க காத்திருக்கிறார் யுவராஜ் சிங். இது குறித்து அவர் பேசும்போது தான் தன்னுடைய ரசிகர்களுக்கு எப்பொழுதுமே அருகில் இருக்க விரும்புவதாகவும் அதற்கு இது சிறப்பான முயற்சி என்றும் கூறியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற இவர் இந்த ஆண்டு ஆரம்பத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடரில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் உடன் இணைந்து விளையாடினார். மீண்டும் தற்போது இந்த தொடர் நடக்க இருப்பதால் யுவராஜ் சிங்கை மீண்டும் களத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.