தோனி விராட் ரோகித் யாருமில்லை.. இவங்க 3 பேரைதான் என் டீம்ல முதல்ல எடுப்பேன் – யுவராஜ் சிங் ருசிகர பதில்

0
112
Yuvraj

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அணிக்கு மூன்று வீரர்களை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு ருசிகர பதிலை தந்திருக்கிறார்.

ஏற்கனவே வாழ்நாள் முழுவதும் இணைந்து விளையாட விரும்பும் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு சச்சின் மற்றும் தோனி இருவரது பெயரையும் கூறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், ரோகித் சர்மாவின் பெயரைக் கூறி ஆச்சரியப்பட வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

யுவராஜ் சிங்கின் எதிர்கால திட்டம்

இந்திய அணி வீரர்கள் ஐசிசி தொடர்களில் நாக்அவுட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்திருந்தார்கள். இதன் காரணமாக ஏற்கனவே நாக் அவுட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருக்கும் தன்னால் அப்படியான நேரங்களில் இந்திய அணி வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்க முடியும் என்றும், எனவே அந்த நேரத்தில் இந்திய அணியின் மென்டராக இருக்க விரும்புவதாக யுவராஜ் சிங் கூறியிருந்தார்.

மேலும் ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒன்றுக்கு வழிகாட்டியாக அல்லது பயிற்சியாளராக இருக்கவும் விருப்பம் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் ராகுல் டிராவிட் வரையில் ஐபிஎல் தொடருக்குள் பயிற்சியாளராக வந்துவிட்ட பொழுதிலும், யுவராஜ் சிங்கை இன்னும் எந்த அணி நிர்வாகமும் அணுகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த மூன்று பேரை தேர்வு செய்வேன்

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யுவராஜ் சிங்கிடம் உங்களுடைய அணிக்கு மூன்று பேரை தேர்வு செய்வீர்கள் என்றால் அது எந்த வீரர்களாக இருப்பார்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதையும் படிங்க : ரோகித் அந்த 2 பங்களாதேஷ் வீரர்களை சாதாரணமா எடுக்க வேணாம்.. சவால் காத்திருக்கு – ஓஜா அறிவுரை

இதற்கு மீண்டும் யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறி ஆச்சரியப்படுத்தினார். யுவராஜ் சிங் இந்த கேள்விக்கு பதில் அளித்தபோது “கிறிஸ் கெயில் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா” ஆகியோரை தேர்வு செய்தார். அவருடன் இணைந்து விளையாடிய எந்த இந்திய வீரர்களையும் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -