ரோகித் சர்மா கேப்டசின்சிக்கு 10/10 கொடுக்கிறேன் – யுவ்ராஜ் சிங் ரேட்டிங்!

0
529

ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்புக்கு பத்துக்கு பத்து கொடுக்கிறேன் என ட்விட்டரில் கூறியுள்ளார் யுவராஜ் சிங்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பேற்றதில் இருந்து இந்திய அணி பல்வேறு சரிவுகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஆசியக் கோப்பையை இழந்தது, டி20 உலக கோப்பையில் அரையிறுதியுடன் வெளியேறியது என இரண்டும் இரண்டுமாத இடைவெளியில் நடந்ததால் கூடுதல் அழுத்தமும் அவருக்கு வந்து கொண்டிருக்கிறது.

அத்துடன் தனிப்பட்ட பேட்டிங்கிலும் ரோகித் சர்மா சரிவர செயல்படவில்லை. தொடர்ந்து சொற்ப ரன்களுக்கும் ஆட்டம் இழந்து வருகிறார். டி20 உலககோப்பையில் 6 போட்டிகளில் வெறும் 116 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இவரது சராசரி கிட்டத்தட்ட 22 மட்டுமே.

ஏற்கனவே டி20 போட்டிகளுக்கு ஹார்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து பரிசோதனைகள் நடத்தி வருகிறது பி சி சி ஐ. அடுத்ததாக ஒரு நாள் போட்டிகளுக்கும் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டுமா? என்ற கேள்விகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்ட வருகின்றன.

பி சி சி ஐ, 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைக்கு சரியான கேப்டனாக ரோஹித் சர்மா மட்டுமே இருக்க முடியும் என்று கோணத்தில் பார்த்து வருகிறது. ஆனால் அவர் சமீபத்தில் செயல்படும் விதம் திருப்தி அளிக்கவில்லை. எளிதாக வெற்றி பெற வேண்டிய வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியை இந்திய அணி இழந்திருக்கிறது. இதற்காகவும் ரோகித் சர்மா விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

ஸ்போர்ட்ஸ் கீடா நிறுவனம் ட்விட்டரில், ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பிற்கு 10க்கு எத்தனை ரேட்டிங் கொடுப்பீர்கள்? என கேள்விகள் எழுப்பியது. அதற்கு யுவராஜ் சிங் பத்துக்கு பத்து என்று பதில் அளித்து இருக்கிறார்.

பிசிசிஐ மட்டுமல்லாது முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சனர்கள் பலரும் ரோஹித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு மீது கூடுதல் நம்பிக்கை வைத்திருக்கின்றனர் என்று இதிலிருந்து தெரிகிறது.