“இப்படி செய்வதாக இருந்தால் நீங்கள் நல்ல கேப்டனே கிடையாது!” – முகமது கைப் ரோகித் மீது தாக்கு!

0
254
Kaif

இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் விளையாட ரோஹித் சர்மா தலைமையில் பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது!

இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் மொத்த பேட்டிங் வரிசையும் சீர்குலைய இந்திய அணி 186 ரன்கள் மட்டுமே சேர்த்து மொத்தமாக ஆட்டம் இழந்தது. துணை கேப்டன் கே எல் ராகுல் மட்டுமே அரை சதம் அடித்து அணி கவுரவமான இலக்கை எட்ட உதவினார்.

- Advertisement -

இதற்கடுத்து பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்கையில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக அமைந்தது. பங்களாதேஷ அணி 139 ரன்களுக்கு ஒன்பது விக்கட்டுகளை இழந்துவிட்டது. இந்திய அணி எளிமையாக வெற்றி பெறுகின்ற நிலையில் அப்போது இருந்தது.

ஆனால் இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த மகதி ஹசன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிஷூர் ரகுமான் இருவரும் அரை சதம் பார்ட்னர்ஷிப் அமைத்து பங்களாதேஷ் அணியை திரில் வெற்றி பெற செய்தார்கள்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் என்பதால் அடுத்து நடைபெறவுள்ள இரண்டாவது போட்டி வாழ்வா சாவா போட்டியாக இந்திய அணிக்கு அமைந்துள்ளது. இந்தப் போட்டி குறித்து மிக முக்கியமான கருத்துக்களை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார்.

- Advertisement -

அவர் இது குறித்து பேசும் பொழுது
” நாம் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க வேண்டும். குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மாவிடம் இருந்தும் விராட் கோலி இடம் இருந்தும் ரன்கள் வரவேண்டும். ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக அணிக்கு ரன்களை தந்தே ஆக வேண்டும். ஆனால் இதில் அவர் தொடர்ந்து பின்தங்கி வருகிறார் ” என்று கூறியுள்ளார்…

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “அடுத்த போட்டிக்கு இந்திய அணியில் மாற்றங்கள் செய்தால் அது சலசலப்பைதான் ஏற்படுத்தும். குல்தீப் சென் இந்த தொடரின் மூன்று போட்டியிலும் விளையாட வேண்டும். ஒரு போட்டியில் தோற்ற காரணத்திற்காக அடுத்த போட்டியில் இருந்து அவரை நீக்கினால் அது ஒரு நல்ல கேப்டனுக்கு அழகாக இருக்கவே இருக்காது. குல்தீப் சென் இரண்டு விக்கெட் களை எடுத்தார் ஆனால் கொஞ்சம் ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்!