உங்க டீம் செலக்சனே தப்பு.. உங்களால பாகிஸ்தானை ஜெயிக்க முடியாது.. அவங்க டாப்- பாகிஸ்தான் வீரர் பரபரப்பான கணிப்பு!

0
1047
Asia cup

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன என்றால், மைதானங்கள் நிரம்பி, பரபரப்பான ஆட்டம் கிடைத்து, வருமானம் பெருகும் என்பது மட்டும் கிடையாது.

போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே போட்டி குறித்து வெகு சூடான கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும். போட்டி நடக்கும் நாளை விட போட்டிக்கு முன்நாட்கள்தான் மிகவும் வார்த்தை போர்சூடாக இருக்கும்.

- Advertisement -

பெரும்பாலும் இரு அணிகள் பற்றிய கணிப்புகளில் இந்திய தரப்பில் இருந்து சர்ச்சையான அளவிற்கு எந்த ஒரு கருத்துக்களும் வெளியே வராது. இந்திய முன்னாள் வீரர்கள் தங்களால் முடிந்தவரை ஒரு கோட்டில் நின்று கருத்து சொல்லி கடந்து விடுவார்கள்.

ஆனால் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் ஒருவராவது சர்ச்சைக்குரிய வகையில் பேசி அது சமூக வலைதளத்தில் பலரால் விவாதிக்கப்படும் விஷயமாக மாறிவிடும்.

தற்பொழுது ஆசியக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி நாளை துவங்கும் ஆசியக் கோப்பை தொடரில், இந்திய அணி செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கை கண்டி பல்லகலே மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டி குறித்தும் இரு அணிகள் குறித்தும் பேசி உள்ள பாகிஸ்தான அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ” வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமான ஃபார்மில் இருந்த ஜெய்ஸ்வால் வீழ்த்தப்பட்டு இருக்கிறார். அதே சமயத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சஞ்சு சாம்சன் வீணடித்தார். ஆனால் அவர் தொடர்ந்து அணியில் இடம் பிடித்து விளையாடினார். இந்த நிலையில் எந்தவிதமான போட்டி பயிற்சியும் இல்லாமல் காயத்தில் இருந்து திரும்பி வரும் கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் இருவருக்கும் அணியில் இடம் தரப்பட்டு இருக்கிறது. இந்தத் தேர்வு முறையே தவறு.

இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டி நல்ல ஒரு போட்டியாக இருக்கும். பாகிஸ்தானுக்கு மிகவும் சமநிலை கொண்ட ஒரு அணி இருக்கிறது. பாபர் அசாம் மற்றும் இமாம் இருவரும் நாக் அவுட் போட்டிகளில் நன்றாக விளையாடியிருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடம் டி20 தொடரை இழந்தது. ஸ்ரேயாஸ், கே.எல். ராகுல், பும்ரா ஆகியோர் காயத்திற்கு பிறகு திரும்பி வந்திருக்கிறார்கள். ரோஹித் சர்மா விராட் கோலி இருவரும் பேட்டிங்கில் சீரற்ற நிலையில் இருக்கிறார்கள். இரண்டு அணிகளையும் எடுத்துக் கொண்டால் இந்தியாவை விட பாகிஸ்தான்தான் சிறப்பாக இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!